டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இண்டிகோ விமானத்தில் எக்கானமி கிளாஸில் நுழைந்த இஸ்ரோ கே சிவன்.. பயணிகள் உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இண்டிகோ விமானத்தில் நுழைந்த இஸ்ரோ கே சிவன்.. பயணிகள் வரவேற்பு-வீடியோ

    டெல்லி: இஸ்ரோ தலைவர் கே சிவன் விமானத்தில் பயணம் செய்த போது அவரை பயணிகள் மற்றும் விமான பணிப் பெண்கள் கை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதில் இருந்த லேண்டர் கருவி தரையிறங்க வேண்டிய நேரத்தில் இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ISRO K. Sivan gets thunder applause in Indigo flight at economy class

    95 சதவீதம் வெற்றி அடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். ஏனெனில் லேண்டர் தரையிறக்கத்தை அவர் பிரசவத்துடன் ஒப்பிட்டிருந்தார். அதுபோல் ரோவர் அவர் பிறக்கும் குழந்தையுடன் ஒப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து நிலவில் வெளிச்சம் 14 நாட்களும் அடுத்த 14 நாட்கள் இருட்டும் இருக்கும் என்பதால் வெளிச்சம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுவோம் என சிவன் தெரிவித்திருந்தார். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த சம்பவத்திலிருந்து கே சிவனை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் அவர் அண்மையில் இண்டிகோ விாமனத்தில் பயணிப்பதற்காக சிவன் உள்ளே சென்றார். அதுவும் எக்கானமி கிளாஸில் பயணம் செய்தார்.

    அப்போது அங்கிருந்த பயணிகளும் விமான பணிப் பெண்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் சிவனுடன் பெரும்பாலானோர் செல்பி எடுத்துக் கொண்டனர். அவருடன் ஏராளமானோர் உரையாடல் நடத்தினர்.

    English summary
    ISRO K. Sivan gets thunder applause in Indigo flight at economy class. The crew of the flight recognised him and takes selfie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X