டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேருவும், இந்திராவும்தான் அடிப்படை காரணம்.. மிஷன் சக்தி.. மோடிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்திய ஏவுகணை சாதனைபடைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பிரதமர் இவ்வாறு வந்து நாட்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றியது, தேர்தல் ஆதாயத்திற்காக என முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

மற்றொரு பக்கம், காங்கிரசும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளது. மோடி அரசுக்கு இந்த சாதனையின் பங்கு முழுக்க போய்விட கூடாது என்பதில் காங்கிரசும் அக்கறை காட்டுகிறது.

ISRO set up under Indira Gandhi, Congress claim share in Mission Shakti

7 வருடத்திற்கு முன்பே வந்த திட்டம்.. புதிது போல அறிவித்த மோடி.. மிஷன் சக்தியின் திடுக்கிடும் உண்மை! 7 வருடத்திற்கு முன்பே வந்த திட்டம்.. புதிது போல அறிவித்த மோடி.. மிஷன் சக்தியின் திடுக்கிடும் உண்மை!

காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக வெளியிட்ட ட்வீட்டில், இந்தியாவின் புதிய சாதனைக்காக, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு, இஸ்ரோ மற்றும் அரசை நாங்கள் பாராட்டுகிறோம். 1962ம் ஆண்டு, பண்டித ஜவகர்லால் நேரு, இந்திய விண்வெளி திட்டத்தை துவக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பை இந்திரா காந்தி, துவங்கி வைத்தார். இவை தங்களின் அபார சாதனைகள் மூலம், இந்தியாவை எப்போதுமே பெருமிதம் கொள்ளச் செய்து வருகின்றன.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு 1958ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு முதல் அரசை அமைத்தபோது உருவாக்கப்பட்டது. நமது ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வழங்குவதில் அதன் பங்களிப்பு சிறப்பானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
"We congratulate @isro & the Govt on the latest achievement for India. The Indian Space Programme established in 1961 by Pt. Jawaharlal Nehru & the Indian Space Research Organisation set up under Smt. Indira Gandhi has always made India proud with its ground breaking achievements" says Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X