டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: அரசின் உத்தரவுகள் தெளிவாக இல்லாததால் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர் என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "புலம்பெயர்ந்தோர் பீதியடைந்துள்ளதால் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்காக நகரங்களை விட்டு வெளியேறுகிறார்கள்,

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையால் நாடு லாக் டவுன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை

எங்கு தங்குவார்கள்

எங்கு தங்குவார்கள்

இந்தியா முழுவதும் புலயம் பெயர்ந்த மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதைக் பார்க்கும் போது விரக்தியால் தான் நடக்கிறது. இதை கண்டு ஆச்சரியப்படவில்லை. அவர்களுக்கு சொந்த ஊரில் உயிர்வாழ சில ஆதாரங்கள் இருக்கலாம். இப்போது உள்ள பொருளாதார அழுத்தங்கள் வெளிப்படையானவை. அவர்கள் அனைவருக்கும் சொந்த ஊரில் உயிர்வாழ சில நிலங்களும் பிற வளங்களும் இருக்கலாம். இந்த மக்கள் நிறைய பேர், அவர்கள் வீட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள், அதனால் அவர்கள் இப்படி செல்ல பெரிய காரணங்கள் இல்லை. கட்டுமான நிறுவனங்கள் அவர்களுக்கு இதுவரை தங்குவதற்கு ஒரு இடம் வழங்கின. இப்போது அவையும் மூடப்பட்டுவிட்டதால், அவர்கள் எங்கு தங்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

போலீஸார் அடிக்கிறார்கள்

போலீஸார் அடிக்கிறார்கள்

இப்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகள் தெளிவாக இல்லை, இது புலம்பெயர்ந்தோர் மத்தியில் பீதியைத் தூண்டியுள்ளது. உங்கள் தொழில்கள் மூடப்பட்டால் உங்களை கவனித்துக்கொள்வது எங்கள் வேலை என்று மாநிலங்கள், மத்திய அரசுகள் ஆறுதல் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். காவல்துறையினருக்கு சரியான தகவலை அனுப்புவது மிகவும் முக்கியமானது. காவல்துறையினர் கலவையான தகவல்களை மக்களுக்கு அனுப்புகிறார்கள், மளிகைக் கடைகளைத் திறப்பதற்காக மக்களை அடிக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். பிரதமர் சொன்னதை செய்ய செய்ய முயற்சி செய்ய வேண்டும். இந்த செய்தியே காவல்துறைக்குச் செல்வது மிகவும் முக்கியம். இது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கான நேரம் அல்ல.

உணவகங்களும் இல்லை

உணவகங்களும் இல்லை

ஒரு கருத்தாக சமூக விலகல் ஏழைகளுக்கு விலக்கப்பட வேண்டுமா என்று கேட்கிறீர்கள் மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்பது இல்லை. கிருமிகள் மக்களிடமிருந்து பரவுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் மாற்று என்ன? நான் நினைக்கிறேன் இயல்புநிலை உடைந்துவிட்டது, அதைக் கையாள்வதில் அவர்களுக்கு சிக்கல் உள்ளது. நான் ஏழைகளை குறை கூறவில்லை, அதைக் கையாள்வதில் எனக்கும் சிக்கல் இருக்கும். ஏழைகளுக்கு தற்போது வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது, இந்த நேரத்தில், அதிக வசதிகளை கிடைக்க செய்ய செய்ய வேண்டியது மிக முக்கியம். சாப்பாடு அளிக்கும் ஹோட்டல்கள் அனைத்தும் காலியாக உள்ளன. ஆனால் அவர்களுக்கு இது மிக முக்கியமானது. இது தனியாரின் சொத்து என்று ஒதுங்கி கொள்ள இது நேரம் அல்ல. கிடைக்கும் ஒவ்வொரு வசதியையும் மக்களுக்காக பயன்படுத்துவது முக்கியம்.

கடினமாகவிடும்

கடினமாகவிடும்

நாடு தழுவிய ஊரடங்கின் தாக்கத்திற்கு ஈடாக நிவாரண உதவிகளில் இந்தியா அதிக பணத்தை செலவிட வேண்டுமா என்று என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் இப்போது பொருளாதாரம் கட்டுபாடில்லாமல் மோசமான நிலைக்கு செல்லப்போகிறது. அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர் செலவிட ஒப்புக் கொண்டுள்ளது இந்த காலாண்டில் பொருளாதாரம் 25 சதவிகிதம் சுருங்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு துல்லியமானது என்று தெரியவில்லை, ஆனால் நம்மிடம் அப்படி ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும். பொருளாதாரம் இங்கு புத்துயிர் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். "

மாற்று வழி என்ன

மாற்று வழி என்ன

நகர்ப்புற ஏழைகள், கிராமபுற ஏழைகள் ஆகிய இருவரும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழக்க நேரிடும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். ஏதேனும் தொற்றுடன் கிராமப்புறங்களுக்குச் சென்றால், அது பரவிவிடும். கழிப்பறைகள் மிகவும் சுத்தமாக இல்லை. இந்த ஒரு பெரிய துயரத்தில் இருந்து நாம் எப்படியாவது தப்பித்தால் நாம் பெரும் அதிர்ஷ்டசாலியாக இருப்போம், ஆனால் அடுத்த முறை தப்பிப்போம் என்று ஒரு பாடமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனினும் நாம் இதிலிருந்து தப்பிப்போம் என்று நம்புகிறேன். மாற்று பற்றி சிந்திக்கும் போது என் இதயமே நொறுங்கி போகிறது. நோய்த்தொற்று ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற சூழ்நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வு பயமுறுத்துகிறது.

தொற்றுடன் வருவார்கள்

தொற்றுடன் வருவார்கள்

"இது மிகவும் பயமுறுத்தும் சிந்தனை, ஏனென்றால் மக்கள் தொற்றுநோய்களுடன் கிராமங்களுக்கு வீட்டிற்கு வருவார்கள் என்று நான் நினைக்கிறேன், அறிகுறிகளைக் கண்டறியும் போதிய அறிவு கூட இல்லாமல். கிராமங்களில் உள்ள சுகாதார உள்கட்டமைப்புகள் அசாதாரணமாக பலவீனமாக உள்ளன. மருத்துவம் பயின்ற பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ தகுதி இல்லை. கிராமப்புற சுகாதார வழங்குநர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் அதை குணப்படுத்த முடியுமா என்பது முக்கியமல்ல, குறைந்தபட்சம் அவர்கள் தொற்றுநோய்க்கான ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காண வேண்டும்" இவ்வாறு கூறினார்.

English summary
Nobel laureate Abhijit Banerjee says about Migrants that they are panicked as rules on ground not clear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X