டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ1,000 கோடி அன்னிய செலாவணி, ஹவாலா மோசடி தொடர்பாக டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சீனாவின் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லி மற்று சுற்றுவட்டாரங்களில் சீனர்கள் சிலர் இந்தியர்களுடன் இணைந்து ஹவாலா, அன்னிய செலாவணி மோசடிகளில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகத்துக்குரிய சீன நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்புபுதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு

IT Department searches premises of Chinese entities

இந்த சோதனையின் போது 40 போலி வங்கி கணக்குகள் சிக்கின. இந்த கணக்குகள் மூலம் சுமார் ரூ1,000 கோடிக்கு பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்கள் உதவியுடன் ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதும் இந்த சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

IT Department searches premises of Chinese entities

இதனிடையே இச்சோதனைகளில் சீனாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கப்படவில்லை.

English summary
Income Tax Department conducted raids against few Chinese individuals and their Indian associates for running a money laundering racket worth Rs 1,000 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X