டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐடியில் வேலை வேண்டுமா.. இப்ப இந்த வேலைக்குத்தான் ரொம்ப மவுசு.. வந்தா விடாதீங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு (பிஎஃப்எஸ்ஐ) துறைக்கு சேவை செய்யும் ஐடி விற்பனையாளர்கள், மற்ற அனைத்து தொழில்நுட்ப நிலைகளிலும் முடக்கம் உள்ள நிலையில், வீட்டில் இருந்தே பணியாளர்கள் வேலை செய்வதால், இனி நிறுவனங்கள் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய அதிகமான சைபர் செக்யூரிட்டி நிபுணர்களை பணியமர்த்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லாக்டவுன் முடிந்தாலும் நிறுவனங்கள் ரிமோட்-வொர்க் மாடலான வீட்டில் இருந்தே பணியாளர்களை வேலை செய்ய வைக்கும் முடிவுக்கு வந்துள்ளன. லாக்டவுனுக்கு இடையில் நிறுவனங்களின் நெட்வொர்க்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை அதிகம் விரும்புகின்றன. நிறுவனங்களில் பணியாற்றும் பல நிலை ஊழியர்களின் வேலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இணைய பாதுகாப்பு பணிகளில் (சைபர் செக்யூரிட்டி பணியாளர்கள்) ஈடுபடுவோருக்கான தேவை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

அண்மையில் நடந்த இணைய வைரஸ் அச்சுறுத்தல் சம்பவங்கள் காரணமாக வீடியோ கான்பரன்சிங் ஆப்பான ஜூம் மற்றும் ஐடி சேவை வழங்குநரான காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புகளை மேம்படுத்துவதை கட்டாயமாக்கி உள்ளன. இதனால் இணைய பாதுகாப்பு பணியில் தேவை 15% வரை அதிகரித்துள்ளது என்று டீம்லீஸ் டிஜிட்டலின் தலைமை சிறப்பு ஊழியர்கள் சுனில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் வுஹானில் தோன்றியதாக கூற முடியாது.. இந்தியாவுக்கான சீன தூதரகம் அதிரடிகொரோனா வைரஸ் வுஹானில் தோன்றியதாக கூற முடியாது.. இந்தியாவுக்கான சீன தூதரகம் அதிரடி

அதிகம் பேர் தேவை

அதிகம் பேர் தேவை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முன்பே இணைய பாதுகாப்பு பணிகளுக்கு நிறைய ஆட்கள் தேவை இருந்தது. இதற்கிடையில் இந்த கோவிட் -19 தொற்றுநோய் நிகழ்ந்துள்ளது. இதனால் தேவை இப்போது மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிக் ஃபோர் ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் பி.எஃப்.எஸ்.ஐ துறைக்கு சேவை செய்யும் ஐ.டி சேவை நிறுவனங்களில் இணைய பாதுகாப்பு பணிகளுக்கு ( Cybersecurity ) தேவை அதிகரித்துள்ளது,

டெவலப்பர்கள் தேவை குறைவு

டெவலப்பர்கள் தேவை குறைவு

கடந்த இரண்டு வாரங்களாக புதிய ஊழியர்களை தேர்வு செய்வது ஒத்திவைப்பது அதிகமாக காணப்படுகிறது, ஆனால் தேவை உள்ளது, என்றார். இருப்பினும், டிஜிட்டல் மயமாக்கல் (வல்லுநர்கள்) மற்றும் வழக்கமான டெவலப்பர் திறன்கள் போன்ற பதவிகளுக்கு, தேவை குறைந்துவிட்டது, "எனவே இந்த பணிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்


கியூடெக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களுக்கு சைபர் செக்யூரிட்டி வேலைக்கு பணியமர்த்துவது முன்னுரிமையாக இருக்கும் இருப்பினும், இந்த வேலையின் தன்மை முற்றிலும் மாறுபட்டதாக , work-from-home மாடலில் இருக்கும்,
இணைய பாதுகாப்பு நிபுணர்களின் தன்மை மாறும். பாதுகாக்க வேண்டிய கடைசி பாய்ண்டுகள் வரை கண்டறிதல் மற்றும் பதில் அளித்தல் மற்றும் வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்டவைகள் பற்றி அதிக அறிவு உள்ளவர்களின் தேவை அதிகமாக இருக்கும்.

மால்வேர் அட்டாக்

மால்வேர் அட்டாக்

பாதுகாப்புப் பேச்சில், மடிக்கணினிகள் அல்லது பிற வயர்லெஸ் மற்றும் மொபைல் சாதனங்கள் போன்ற கார்ப்பரேட் நெட்வொர்க்கில் உள்ள தொலைநிலை சாதனங்களை கடைசி பாய்ண்டுகளாக (இறுதிப்புள்ளிகள்) குறிப்பிடுகின்றன. முன்னதாக, இறுதிப்புள்ளி பாதுகாப்பு வைரஸ் தடுப்பு அல்லது வைரஸ் எதிர்ப்பு தீர்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அவை அதிக அளவில் 'தடுப்பு' சாப்ட்வேர்களாக இருந்தன. நிலையான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் பகுப்பாய்வு எதுவும் இல்லை. இப்போது, ​​பல்வேறு வீடுகளில் அமர்ந்திருக்கும் இந்த இறுதிப் புள்ளிகள் அனைத்தும் இலக்குகளாகின்றன, எனவே தொடர்ந்து கண்காணிப்பு இருக்க வேண்டும். எனவே, தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பின் தன்மை கொஞ்சம் மாறும்" என்றார்.

சைபர் செக்யூரிட்டி பணிகள்

சைபர் செக்யூரிட்டி பணிகள்

சிறப்பு பணியாளர் நிறுவனமான எக்ஸ்பெனோவின் இணை நிறுவனர் கமல் கரந்தின் கூறுகையில், நிறுவனங்கள் முன்னர் சைபர் செக்யூரிட்டி பதவிகளுக்கு பணியமர்த்துவதில் காலத்தை இழுத்துக்கொண்டிருந்தன, ஆனால் தாமதமாக அதிகரித்து வரும் சைபராடாக்குகளின் எண்ணிக்கையால் அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளன. லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னர் "சைபர் செக்யூரிட்டி தொழில் வல்லுநர்கள் முக்கியமான முதல் ரோலில் இருப்பார்கள் என்றார்.

சைபர் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், . " வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தில் ஏற்கனவே தங்கள் பாதுகாப்பு உள்கட்டமைப்பை பூர்த்தி செய்துள்ளோம். எங்கள் சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை நாங்கள் மறுசீரமைத்தோம், மேலும் எங்கள் அனைத்து திட்ட மேலாண்மை நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் மூலம் முறையான பணி ஒதுக்கீடு, பணி கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை உறுதிசெய்துள்ளோம்." என்றார்.

மிகவும் கவனமாக உள்ளது

மிகவும் கவனமாக உள்ளது

இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் கூறுகையில். work-from-home திட்டப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டங்களை வழங்குவதில் சைபர் பாதுகாப்புக்கு இன்போசிஸ் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. நாங்கள் மிகவும் கவனமாக இருக்கும் விஷயம் பாதுகாப்பு. நாங்கள் எதைச் செய்தாலும் சைபர் பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க விரும்புகிறோம், அங்கு நாங்கள் எந்தவிதமான வீழ்ச்சியும் ஏற்படாது " என்று கூறினார். காக்னிசன்ட் நிறுவனமும் சைபர் செக்யூரிட்டி வேலைக்கு அதிகம் பேரை எடுக்க உள்ளது.

இவர்களுக்கு எதிர்காலம்

இவர்களுக்கு எதிர்காலம்

எனவே தற்போதைய நிலையில் சைபர் செக்யூரிட்டி பணிகளுக்குத்தான் அதிக எதிர்காலம் உள்ளது.வீட்டில் இருந்தே ஊழியர்கள் இனி வரும் காலங்களில் வேலை செய்வார்கள் என்பதால் அவர்களின் லேப்டாப் உள்ளிட்ட கணிணிகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய கடமையை வெறும் சாப்ட்வேர் மட்டுமின்றி சைபர் செக்யூரிட்டி பணியாளர்களும் அதிகம் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. எனவே இதற்குதான் இனி எதிர்காலம் உள்ளது. இதற்கான வாய்ப்புகளை விட்டு விடாதீர்கள்

English summary
Only cybersecurity jobs at IT firms are Covid-19 virus-proof
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X