டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுத்த பொய்.. ராகுல் மீது குற்றஞ்சாட்டிய ஸ்மிரிதி இராணி.. கடிந்து கொண்ட தேர்தல் ஆணையம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

நேற்று நாடு முழுக்க ஐந்தாவது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 7 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. 51 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

It is a false allegation, ECI dismisses Smriti Iranis Charges against Rahul Gandhi

இந்த தேர்தல் அமேதி, ரேபரேலி ஆகிய முக்கிய தொகுதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் நேற்று அமேதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிரிதி இராணி, அமேதி தேர்தலில் முறைகேடு நடக்கிறது. இங்கு வாக்குசாவடிகளை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காக ராகுல் காந்தியின் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.

அப்படி கூறியதோடு, இது தொடர்பாக மூதாட்டி ஒருவர் வெளியிட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதேபோல் தேர்தல் ஆணையத்திடம் டிவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

பெண்ணின் கையைப்பிடித்து கை சின்னத்தில் ஓட்டு போட்ட காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட ஸ்மிருதி இரானி!பெண்ணின் கையைப்பிடித்து கை சின்னத்தில் ஓட்டு போட்ட காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட ஸ்மிருதி இரானி!

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.

அதில், இந்த புகார் பொய்யானது. இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் மிக மிக பாதுகாப்பாக நடைபெற்றது. இந்த வீடியோ பொய்யானது, என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ராகுல் காந்திக்கு எதிரான புகாரையும் தள்ளுபடி செய்துள்ளார்.

English summary
Lok Sabha Election 2019: It is a false allegation, ECI dismisses Smriti Irani's Charges against Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X