டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தனக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்று மற்றும் உணர்ச்சிபூர்வமான நாள் என்று கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990 ல் சோம்நாத் முதல் அயோத்தி வரை ராம ரத யாத்திரை மேற்கொண்டவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. இன்றைய நவீன பாஜகவிற்கு அடித்தளம் அமைத்து உருவாக்கியவர் அத்வானி தான். அயோத்தியல் ராமர் கோயில் அமைவதற்கு காரண கார்த்தாவாகவும் திகழ்ந்தவர் ஆவார்.

 it is a historic and emotional day for him and for all Indians : LK Advani on Ram temple

எல் கே அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ ராம் மந்திரம் இந்தியாவை ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் இணக்கமான தேசமாக பிரதிநிதித்துவப்படுத்தும் என்று நம்புகிறேன். மேலும் யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவருக்கும் நீதி தரும் இணக்கமான நாடாகவும் மற்றும் நல்ல ஆட்சி தரும் ராம ராஜ்ஜியத்தை ஸ்ரீ ராம் மந்திரம் தரும் என்றும் நம்புகிறேன்.

"ராம் ஜன்மபூமி இயக்கத்தின் போது, ​​விதி என்னை 1990 ல் சோம்நாத் முதல் அயோத்தி வரை ராம் ராத் யாத்திரையின் வடிவத்தில் ஒரு முக்கிய கடமையைச் செய்ய வைத்தது, இது எண்ணற்ற பங்கேற்பாளர்களின் அபிலாஷைகள், ஆற்றல்கள் மற்றும் ஆர்வங்களை வளர்க்க உதவியது.

அயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

"ஸ்ரீ ராமர் இந்தியாவின் கலாச்சார மற்றும் நாகரிக பாரம்பரியத்தில் மதிப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளார், மேலும் இந்த கோயில் அருள், கௌரவம் மற்றும் மதிப்பின் உருவகமாகும். இந்த கோயில் அனைத்து இந்தியர்களையும் அவரது நற்பண்புகளை ஊக்குவிக்க ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை, எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்' இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்

92 வயதான பாஜக தலைவர் எல்கே அத்வானி, கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது குறித்த கவலைகளாலும், வயது முதிர்வு உள்ளிட்ட காரணத்தாலும், அயோத்தி கோயிலின் பூமி பூஜைக்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நாளை அயோத்தியில் பிரதமர நரேந்திர மோடி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க உள்ளார்.

English summary
A day before Prime Minister Narendra Modi lays the foundation stone for a Ram temple in Ayodhya, veteran BJP leader L K Advani on Tuesday said it is a historic and emotional day for him and for all Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X