டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக களம் இறங்கும் ஆளில்லா விமானங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக ஆளில்லா விமானங்கள், விமானங்கள் ராஜஸ்தானில் களம் இறங்குகின்றன.

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?

    லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானிலிருந்து பயணம் செய்து இந்தியாவுக்கு நுழைந்துவிட்டது. தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியது.

    இதையடுத்து மகாராஷ்டிராவில் கிழக்கு பகுதியில் உள்ள 4 முதல் 5 கிராமங்களில் படையெடுத்து வருகிறது. இந்த படை அமராவதி மாவட்டத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து வார்தா, நாக்பூருக்கு சென்றுள்ளது. இந்த பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க ரசாயனங்களை பயிர்கள் மீது அடித்து வருகிறார்கள்.

    விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்

    பேரழிவு

    பேரழிவு

    கிழக்கு ஆப்பிரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியது போல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஆயத்தமாகி வருகின்றன. உலகிலேயே மிகவும் மோசமான புலம்பெயர் பூச்சியான லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆளில்லா விமானங்கள்

    ஆளில்லா விமானங்கள்

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் நேற்று படையெடுத்து வந்தன. 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்குகின்றன. இதனால் ராஜஸ்தானில் முதல் முறையாக ஆளில்லா விமானங்கள், விமானங்களை களம் இறக்கப்படவுள்ளன.

    பஞ்சாப்

    பஞ்சாப்

    குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவை தயார் நிலையில் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள பயிர்களை இந்த பூச்சிகள் சேதப்படுத்திவிட்டன. இவற்றை அழிக்க ஆளில்லா விமானங்கள், செயற்கைகோள் கருவிகள், ஸ்ப்ரேயர்கள் ஆகியவற்றை மாநில எல்லைகளில் குவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அது போல் தீயணைப்பு வாகனங்களை கொண்டு பயிர்களில் ரசாயனக் கருவி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கவலை

    கவலை

    இந்த பூச்சிகளால் பூமியின் நிலத்தில் 20 சதவீதத்தை மிகவும் சாதுர்யமாக தாக்க முடியும். உலக மக்கள்தொகையில் 10-இல் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அளவு வல்லமை படைத்தது. இந்தியாவில் பொதுவாக இந்த பூச்சிகள் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை படையெடுத்து வரும். ஆனால் தற்போது இதன் வருகை முன்கூட்டியே உள்ளதால் கவலை அதிகமாக உள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் 90 நாட்கள் வரை வாழும்.

    English summary
    It is for the first time that drones and planes will be used to fight the locust attack in Rajasthan. It also entered in to Maharastra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X