டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 94.02 கோடி பேருக்கு வேக்சின் போட.. இன்னும் ஒன்றரை வருடம் ஆகும்.. புள்ளி விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 150 நாட்களில் இந்தியாவில் 25.90 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு உள்ளது. இதே வேகத்தில் இந்தியாவில் வேக்சின் போடப்பட்டு வந்தால் மொத்தமாக எல்லோருக்கும் வேக்சின் போட இன்னும் ஒன்றரை வருடம் ஆகும்.

Recommended Video

    Pregnancy, Periods இருக்கு போது பெண்கள் VACCINE எடுக்கலாம் | Dr.Karthika தெளிவான விளக்கம்

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகிய வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி வேக்சின் விநியோகம் தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் வேக்சின் வழங்குவது வேகம் எடுக்காமல் ஆமை வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

    தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

    முதல் கட்டம்

    முதல் கட்டம்

    இந்தியாவில் வேக்சின் வழங்குவது பல்வேறு கட்டமாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் கட்டத்தில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டது. ஜனவரி 16ல் தொடங்கப்பட்ட இந்த வேக்சின் விநியோகம் பிப்ரவரி இறுதி வரை நீண்டது. இதில் நாடு முழுக்க 1,43,01,266 பேருக்கு வேக்சின் போடப்பட்டது.

    இரண்டாம் கட்டம்

    இரண்டாம் கட்டம்

    இரண்டாம் கட்டம் மார்ச் 1ம் தேதி தொடங்கியது. 27 கோடி பேருக்கு வேக்சின் போட வேண்டும் என்று டார்கெட் வைக்கப்பட்டது. 60+ வயதுகொண்டவர்கள் , 45 வயதுக்கு மேல் உடல் குறைபாடு, நோய்கள் கொண்டவர்களுக்கு வேக்சின் போடப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 13.79 கோடி 60+ வயது கொண்டவர்கள் நாட்டில் உள்ளனர். ஆனால் 2வது கட்டத்தில் வெறும் 5,08,16,630 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது. 16.93 லட்சம் பேருக்கு தினமும் வேக்சின் போடப்பட்டது.

    மூன்றாம் கட்டம்

    மூன்றாம் கட்டம்

    இதில் மூன்றாம் கட்ட வேக்சின் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது. இதில் 45+ வயது கொண்ட எல்லோரும் வேக்சின் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விதிப்படி 34.51 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட வேண்டும். ஆனால் அந்த மாதம் 8,98,71,739 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது. தினமும் 29.95 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது.

    நான்காவது கட்டம்

    நான்காவது கட்டம்

    முதல் மூன்று கட்டங்களில் மத்திய அரசு வேக்சின் போட்டு வந்த நிலையில், நான்காம் கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வேக்சின் போட்டது. இதில் 18+ வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போட முடிவு செய்யப்பட்டது. 2011 சர்வே படி 94.02 கோடி பேர் இந்தியாவில் 18+ வயது கொண்டவர்கள். ஆனால் நான்காவது கட்டத்தில் மே மாதத்தில் 6,10,57,003 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது. இது முந்தைய கட்டத்தை விட 32% சரிவு ஆகும்.

    எப்போது

    எப்போது

    இந்தியாவில் வேக்சின் தேவை அதிகமாக உள்ள நிலையில் மாத மாதம் உற்பத்தி செய்யப்படும் வேக்சின் அளவு 8 கோடியை இன்னும் தாண்டவில்லை. இதுவரை 150 நாட்களில் இந்தியாவில் 25.90 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக 17.26 லட்சம் பேருக்கு தினமும் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதே வேகத்தில் இந்தியாவில் வேக்சின் போடப்பட்டு வந்தால் மொத்தமாக எல்லோருக்கும் வேக்சின் போட இன்னும் ஒன்றரை வருடம், அதாவது 18 மாதம் ஆகும்.

    உற்பத்தி

    உற்பத்தி

    இந்தியாவில் இந்த மாதம் 12 கோடி வேக்சின் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. வரும் நாட்களில் சீரம் நிறுவனமும் மாத உற்பத்தியை 10 கோடியாக உயர்த்தும் திட்டத்தில் உள்ளது. ரஷ்யா வேக்சினும் வர உள்ளதால் இந்த மாதத்தில் மட்டும் 12 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட வாய்ப்புள்ளது. அதாவது தினமும் 40 லட்சம் வேக்சின் போடப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    It may take 18 months to partially vaccinate the adult Indian population with the current speed of vaccinations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X