சர்வேயா?.. நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் ஐடி ரெய்டு.. தீவிர சோதனை
டெல்லி: நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன.
சோனு சூட் வீடு மற்றும் அலுவலகங்களில் சர்வே என்ற பெயரில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டிற்கான காரணம் என்ன, எத்தனை பேர் இந்த ரெய்டில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்று முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!
மும்பையில் அவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. அவரின் உறவினர்கள் வீடும் சில உள்ளன. இங்கு எல்லாம் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதவி
கொரோனா முதல் அலையில் இருந்தே சோனு சூட் நாடு முழுக்க மக்களுக்கு உதவி செய்து வந்தார். பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்த வெளிமாநில ஊழியர்கள் சொந்த ஊர் செல்ல உதவினார். வெளிநாடுகளில் தங்கி இருந்த நபர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதேபோல் இரண்டாம் அலையின் போது ரெம்டிசிவர் மருந்து தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர் வரை பல ஆயிரம் பேருக்கு வழங்கி உதவி செய்தார்.

கஸ்டமர் கேர்
மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே தனியாக கஸ்டமர் கேர் ஒன்றையும் நடத்தி வந்தார். உதவி எண்களை கொடுத்து உடனுக்குடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் பல்லாயிரம் பேர் இவரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகளை பெற்றனர். ஆனால் அதே சமயம் எப்படி இவர் மக்களுக்கு தொடர்ந்து உதவுகிறார் என்று கேள்விகள் எழுந்தன. நடிகர் என்றாலும் இவருக்கு இவ்வளவு பணம் ஏது?

பணம்
சிறிய அரசாங்கமே செய்வது போல எப்படி இவர் உதவி செய்கிறார். எப்படி இவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கின்றன என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதோடு இவர் பிரதமர் மோடியை பாராட்டி சில இடங்களில் பேசியதால் பாஜகவின் ஆதரவாளர் இவர். பாஜக இவரை விரைவில் களமிறக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் இவர் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி மூலம் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன.

பஞ்சாப்
டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கும் ஆம் ஆத்மி மூலம் சோனு சூட் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது சோனு சூட் வருமான வரித்துறை மூலம் குறி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவரின் வீடுகளில் நடக்கும் ரெய்டு குறித்த முழு விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.