டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா!

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ1,000 கோடி அன்னிய செலாவணி மற்றும் ஹவாலா மோசடி தொடர்பான வருமான வரித்துறை சோதனை சிக்கிய சீனர் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்தான் இந்த நபர் என்பதும் தெரியவந்துள்ளது.

டெல்லி மற்ற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 21 இடஙக்ளில் சீனா நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 40 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டுரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு

சீனர் கைது

சீனர் கைது

இந்த நிறுவனங்கள் மூலமாக அன்னிய செலாவணி, ஹவாலா மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்களும் சிக்கின. இச்சோதனையின் போது சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் லூ சாங் என தெரிவிக்கப்பட்டது.

திபெத் லூசாங்

திபெத் லூசாங்

இந்த லூசாங்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கிடைத்த தகவல்களால் மலைத்து போய் அதிர்ந்தனர். சீனா ஆக்கிரமித்திருக்கும் திபெத்தைச் சேர்ந்தவர் லூசாங். அகதியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர், இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக மிசோரமை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்.

உளவுக்காக கைது

உளவுக்காக கைது

இதனால் இந்திய பாஸ்போர்ட் அவருக்கு கிடைத்தது. மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றையும் லூ சாங் பெற்றிருக்கிறார் இந்த நிலையில்தான் 2018-ல் சீனாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் லூசாங் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தினால் லூசாங் விடுவிக்கப்பட்டார்.

ஹவாலா மோசடி

ஹவாலா மோசடி

பின்னர் சார்லி பெங் என்ற பெயரில் போலி பான் கார்டு, ஆதார் கார்டு பெற்றுள்ளார் லூசாங். இந்த பெயரிலேயே 40-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் தொடங்கி இருக்கிறார். வங்கி ஊழியர்கள் உதவியுடன் நாள்தோறும் ரூ3 கோடிக்கு ஹவாலா பணப்புழக்கத்தில் லூசாங் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்தே வருமான வரித்துறையின் வலையில் சிக்கினார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
A Chinese national who was arrested on Tuesday night in a raid by the Income Tax Department, was earlier arrested by Delhi Police on spying charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X