டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மசூதிகளுக்கு செல்லுங்கள்.. அல்லாஹ் நம்மை காப்பார்.. தவ்லீஜீ ஜமாத் தலைவர் பேசிய பழைய ஆடியோ லீக்!

Google Oneindia Tamil News

டெல்லி: மசூதிகளில் இருங்கள். கொரோனாவிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பார் என தலைமறைவாக உள்ள தவ்லீஜீ ஜமாத் தலைவர் மவுலானா சாத் கூறுவது போன்ற பழைய ஆடியோ வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    கொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்

    டெல்லியில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 824 வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய அந்தந்த மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன.

    கொரோனா பாதிப்பு 2,014; உயிரிழப்பு 56 ஆக உயர்வு- அதிக பாதிப்பில் தமிழகம் 3-வது இடம் கொரோனா பாதிப்பு 2,014; உயிரிழப்பு 56 ஆக உயர்வு- அதிக பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்

    மவுலானா சாத்

    மவுலானா சாத்

    இந்த நிலையில் இந்த மாநாட்டை அறிவித்து பெருங்கூட்டத்தை கூட்டி நோய் பரவ காரணமாக இருந்ததாக தவ்ஜீலீ ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். 54 வயதான மவுலானா சாத், மதபோதகராவார். இவர் தவ்ஜீலீ ஜமாத்தின் நிறுவனர் முகமது இலியாஸ் காந்த்லவியின் கொள்ளு பேரன் ஆவார். இந்த நிலையில் இவர் பேசுவது போன்ற ஒரு பழைய ஆடியோ வெளியாகியுள்ளது.

    நோய்

    நோய்

    அந்த ஆடியோ நிஜாமுதீனில் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பேசியது போல் இருக்கிறது. அவர் பேசுகையில் மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மக்களை சந்திப்பதையோ தொழுகையை கைவிடுவதையோ செய்யும் நேரம் இதுவல்ல. அல்லாஹ் உங்களுக்கு நோயை கொடுப்பாரேயானால் அதிலிருந்து நம்மை மருத்துவர்களாலும் மருந்துகளாலும் காப்பாற்ற முடியாது.

    அமைதி

    அமைதி

    மசூதிகளுக்கு கூட்டமாக செல்லுங்கள். கொரோனா வைரஸுக்காக மசூதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மசூதிகளில் இருக்க வேண்டாம் என கூறுவோரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். நாம் மசூதிகளில் ஒன்றிணைந்தால் இந்த உலகில் அல்லாஹ் அமைதியை நிலைநாட்டுவார்.

    உண்மைத்தன்மை

    உண்மைத்தன்மை

    மசூதிக்கு சென்றால் இறந்துவிடுவீர்கள் என யாராவது சொல்வதை கேட்டு நீங்கள் அவ்வாறே நினைத்தால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். மசூதியை தவிர்த்து இறப்பதற்கு சிறந்த இடம் வேறு இல்லை என அவர் கூறுவது போன்ற பழைய ஆடியோ வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Tablighi Jamaat Chief can be heard in a leak audio says that stay in mosques, Allah will save us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X