டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்?.. 3-வது அலையின் தொடக்கமா?.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவில் கொரோனா முறையை கையாள்வது பற்றி விமர்சனம் செய்வது நியாயமற்றது என்று இந்தியாவின் சிறந்த நுண்ணுயிரியலாளரும், வைராலஜிஸ்ட்டுமான பேராசிரியர் ககன்தீப் காங் தெரிவித்தார்
நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தொடர்ந்து திண்டாடி வருகிறது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil

    கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நாட்களாக தினமும் 20,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன.

    பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கேரளாவில் தடுப்பூசி செலுத்துதல் மிக வேகமாக நடக்கிறது. ஆனாலும் ஏன் பாதிப்புகள் அதிகரிக்கிறது என்பது கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    கதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைதுகதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைது

    கேரளாவில் கொரோனா

    கேரளாவில் கொரோனா

    நேற்று கேரளாவில் 14,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. கேரளாவில் கொரோனாவுக்கு 1,65,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,27,903 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அங்கு மொத்த பாதிப்பு மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 33,00,000-க்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன. தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 50 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன. கேரளாவில் 12% ஆக இருந்த கொரோனா பாஸிட்டிவ் விகிதம்(டி.பி.ஆர்) நேற்று ஓரளவு குறைந்துள்ளது.

    டி.பி.ஆர் விகிதம் என்ன?

    டி.பி.ஆர் விகிதம் என்ன?

    நேற்று கொரோனா பாஸிட்டிவ் விகிதம்(டி.பி.ஆர்) 10.93% ஆக இருந்தது, ஆனாலும் 323 மாவட்ட பகுதிகளில் கொரோனா பாஸிட்டிவ் விகிதம்(டி.பி.ஆர்) 15%-க்கு மேல் சென்று அச்சத்தை கொடுக்கிறது. மேலும் 118 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 16,955 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய மொத்த பாதிப்பில் 13,221 பேர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள். 80 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 79 சுகாதார பணியாளர்களும் நேற்று வைரஸ் பாதிப்பை கொண்டுள்ளனர்.

     தளர்வுகள்

    தளர்வுகள்

    கொரோனா முதல் அலையில் சிறப்பாக நவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்றது கேரளா. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கேரளாவில்கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    கேரளாவில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது தவிர மற்ற நாட்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மக்கள் அரசு பிறப்பிக்கும் உத்தரவை முறையாக கடைபிடிக்காததால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. முதல் அலையில் கொரோனா சிறப்பாக கட்டுக்குள் வந்தது. ஆனால் ஓணம் பாண்டிகையில் மக்கள் அதிகமாக கூடியதால் தொற்று வேகம் கண்டது.

    நியாயமற்றது

    நியாயமற்றது

    இந்த நிலையில் கேரளாவில் கொரோனா முறையை கையாள்வது பற்றி விமர்சனம் செய்வது நியாயமற்றது என்று இந்தியாவின் சிறந்த நுண்ணுயிரியலாளரும், வைராலஜிஸ்ட்டுமான பேராசிரியர் ககன்தீப் காங் தெரிவித்தார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தி பெயர் பெற்ற கேரளா மாடல் இப்போது எங்கே போனது என்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சனம் வைத்து வரும் நிலையில் பேராசிரியர் ககன்தீப் காங் இவ்வாறு கூறியுள்ளார்.

     பக்ரீத் பண்டிகை

    பக்ரீத் பண்டிகை

    கொரோனா இரண்டாவது அலை செங்குத்தான மலையாக இருந்தால், மூன்றாவது அலை மலையாக இருக்கும். மூன்றாவது அலையை ஒருவர் முறையாக கணித்து விட முடியாது. வைரஸ் மேலும் உருமாறி மிகவும் ஆபத்தானதாக மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொற்று குறையாமல் இருப்பதற்கு குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மற்றும் குறைந்த செரோபிரெவலன்ஸ் போதுமான காரணம் என்பதை ஒப்புக்கொண்டாலும், பக்ரீத் பண்டிகைக்கு முன்பே கேரளா தொற்றுநோய்களின் அதிகரிப்பைக் காணத் தொடங்கியது என்று ககன்தீப் காங் கூறியுள்ளார்.

     பொருளாதார நெருக்கடி

    பொருளாதார நெருக்கடி

    கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இருப்பதால் மற்ற எல்லா மாநிலங்களையும் போலவே கேரளாவும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இதனால் மக்களிடமிருந்து ஊரடங்கை திறக்க அழுத்தம் வருகிறது. ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. கேரளாக்காரர்கள் இந்த முறை முன்பு போல் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாது. . கேரளா மக்கள் வைரஸுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் ககன்தீப் காங் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு-கேரள எல்லை

    தமிழ்நாடு-கேரள எல்லை

    கேரளாவில் கொரோனா தொடந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாடு-கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கொல்லங்கோடு, தென்காசி மாவட்டம் புளியரை, கோவை மாவட்டம் வாளையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் ரயில் மூலம் வரும் பயணிகளுக்கும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெறுகிறது. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆகஸ்டு 5-ம் தேதி முதல் ஆர்.டி.சி.பி.ஆர் சான்றிதழ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Professor Kagandeep Kang, India's leading microbiologist and virologist, said it was unfair to criticize the handling of the corona system in Kerala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X