டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 1200 கி.மீ. தூரம் காயமுற்ற தனது தந்தையை சைக்கிளில் அமர வைத்து பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து சென்ற 15 வயது சிறுமியை பாராட்டிய வெள்ளை மாளிகை ஆலோசகர் இவான்கா டிரம்பிற்கு அந்த சிறுமியின் வேதனையை கார்த்தி சிதம்பரமும் ஒமர் அப்துல்லாவும் விளக்கி பதில் அளித்துள்ளார்கள்.

Recommended Video

    தந்தையுடன் 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு குவியும் பாராட்டு | Oneindia Tamil

    பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவரது மகள் ஜோதி குமாரி (15). பாஸ்வான் டெல்லியில் ரிக்ஷா ஓட்டி வந்தார். லாக்டவுனால் வேலையை இழந்த பாஸ்வானுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

    வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணமில்லை. இதனால் சொந்த ஊர் செல்ல ரூ 500 கொடுத்து சைக்கிள் வாங்கிய சிறுமி ஜோதி குமாரி சுமார் 1200 கி.மீ. தூரம், 7 நாட்கள் தந்தையை பின் இருக்கையில் அமரவைத்தபடி பயணம் செய்து சொந்த ஊரை அடைந்தார்.

    புதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும்புதுவையில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும்

    அவதி

    அவதி

    காயமுற்ற தந்தையை எப்படியாயினும் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற 15 வயது சிறுமி துன்பத்தை தாங்கிக் கொண்ட சம்பவம் பாராட்டுதலுக்குரியது என்றாலும் அவர் மற்றும் அவரை போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மத்திய- மாநில அரசுகள் ஒரு வழியை ஏற்படுத்தாமல் அவர்கள் இவ்வாறு அவதியுறுவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    மனதைரியம்

    மனதைரியம்

    இந்த நிலையில் இந்த சிறுமியை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் 15 வயது ஜோதிகுமாரி காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு 1200 கி.மீ. தூரம் பயணம் செய்து 7 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும் துன்பத்தை தாங்கும் மன தைரியம் கொண்ட அழகான சாதனை.

    இவான்கா

    இவான்கா

    இந்த சிறுமியின் இந்த சாதனை இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என தனது பதிவில் இவான்கா பாராட்டியிருந்தார். 15 வயது சிறுமியின் துயரங்களையும் அவரது முயற்சியின் பின்னால் உள்ள உண்மைகளையும் இவான்கா புரிந்து கொள்ளவில்லை என பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

    ஒமர் ட்வீட்

    ஒமர் ட்வீட்

    இவான்காவின் ட்வீட்டால் திகைத்து போன ஒமர் அப்துல்லாவும் கார்த்தி சிதம்பரமும் அந்த சிறுமி அவ்வாறு சைக்கிளில் பயணம் செய்தது ஏன் என்பது குறித்து இவான்காவுக்கு ட்வீட் மூலம் விளக்கியுள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டரில் கூறுகையில் வறுமை, விரக்தியால்தான், ஜோதி குமாரி 1200 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

    கார்த்தி சிதம்பரம் ட்வீட்

    கார்த்தி சிதம்பரம் ட்வீட்

    அந்த சிறுமியின் வறுமையை துடைக்க முடியாத அரசு அந்த சிறுமியிடம் தோல்வியுற்றது. எனவே இதனை ஒரு சாதனையாக பிரகடனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார் ஒமர் அப்துல்லா. அது போல் சிவகங்கை எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரமும் பீகார் சிறுமியின் நிலை குறித்து விளக்கியுள்ளார்.

    நண்பர்

    நண்பர்

    அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் இது ஒன்றும் சிறப்பான சாதனை அல்ல. வேலை இல்லாமல் பணம் இல்லாமல் விரக்தியால் ஏற்பட்ட வேதனை. உங்கள் "நண்பரும்", விருந்தினருமான நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் இரக்கமற்ற போக்கால் ஏற்பட்டது என கார்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரை ஒருவர் நண்பர் என அழைத்து கொள்வதால் கார்த்தியும் உங்கள் நண்பர் என தனது ட்வீட்டில் சுட்டிக் காட்டியுள்ளார்.

    English summary
    White House advisor Ivanka Trump gets backlash for her tweet on Bihar Girl from Karti Chidabaram and Omar Abdullah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X