டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் வீடு.. நிலம் வாங்கும் விவகாரத்தில் திருப்பம்... புதிய கட்டுப்பாடு வருவதாக பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு புதிய யூனியன் பிரதேசங்களும் அரசியல் சாசன பிரிவு 371ல் கீழ் வர உள்ளதாக பரவிய தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, உருவாக்கப்பட உள்ள குடியேற்ற விதிகள் ஜம்மு காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத்தை, அதன் தனித்தன்மையை பாதுகாக்கவே வகுக்கப்பட உள்ளன என்று கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அரசியலமைப்பின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

இதனால் காஷ்மீர் மற்றும் லடாக் மாநில மக்கள் தங்களின் கலாச்சாரம், வாழ்வுரிமை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்திய நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் பால் அரசியலமைப்பின் 371 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரை கொண்டுவரப்போவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அப்படி செய்தால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிலம் வாங்க 15 வருடங்கள் வசித்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகிவிடும்.

குடியேற்ற விதிகள்

குடியேற்ற விதிகள்

இந்நிலையில் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, அரசியலமைப்பின் 371 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் லடாக் யூடியுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது., அதே நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் குடியேற்ற விதிகளை அறிவிக்கும் நடவடிக்கைகளை வகுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

காங் மீது புகார்

காங் மீது புகார்

பிரதமர் விவாரங்களின் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இந்த வதந்திகள் (371 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள்) காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த இரண்டு கட்சிகளும் அரசியல்மைப்பின் பிரிவு 370ல் பயன் அடைந்து வத்தவை. அவை ஊடகங்களில் கட்டுக்கதைகளை விதைக்கவும் சந்தேகங்களை உருவாக்கியும் வருகின்றன.

371 என்பதே வேறு

371 என்பதே வேறு

பின் வாசல் வழியாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவது போன்ற எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. பிரிவு 370 க்கும், பிரிவு 371 க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரிவு 371 என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மாநிலத்தின் தனித்துவமான கலாச்சார அடையாளம் மற்றும் மரபுகளை மட்டுமே பாதுகாப்பதாகும்" இவ்வாறு கூறினார்.

முன்மொழிவு

முன்மொழிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு "சிறப்பு அந்தஸ்தை" அகற்றுவது குறித்து எந்த மதிப்பீடும் இல்லை என்றாலும், இரு யூனியன் பிரதேசங்களுக்கான குடியேற்றக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன இந்தக் கொள்கை அந்த மாநிலத்தில் குடியிருப்போருக்கான வீடு வாங்குவதற்கான கால அளவு குறைப்பு காலத்தைக் குறிப்பிடும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு புதிய யூனியன் பிரதேசங்களில் 15 ஆண்டுகள் வசித்திட வேண்டும் என்று கட்டாய நிலைக்கு கொண்டுவருவது அட்டவணையில் ஒரு முன்மொழிவாக உள்ளது. ஆனால் இறுதி முடிவு மத்திய அரசால் இன்னும் எடுக்கப்படவில்லை.

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்கள்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் நில உரிமை மற்றும் உரிமை பெறுவதற்கான குடியேற்ற நிலை ஆகியவற்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. தற்போது உள்ள சூழலில் சிவில் சேவைகளில் முன்னுரிமை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் அந்த மாநில மக்கள் சேர்க்கை பெறுவார்கள். இருப்பினும், அரசாங்கத்தின் திட்டத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகள் / வணிக நிறுவனங்களை அமைக்க விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது. "தொழில் அல்லது வணிகப் பிரிவை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், துணை காலனியை நிறுவுவதற்கும் அவர்களுக்கு இப்போதே நிலம் வழங்கப்படும்" என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

விதி விலக்கு

விதி விலக்கு

குடியேற்ற விதிமுறைகள் அனைத்து சாதாரண குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும் என்றும் சில விதிவிலக்குகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநித்தைச் சேரந்த அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அங்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

English summary
The government has denied any move to offer special provisions for UTs of J&K and Ladakh under Article 371 : 15-year residency to be must for owning land in J&K, Ladakh?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X