டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி.. டெல்லியில் அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு.. எல்லாம் இதற்குத்தான்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி, ஆந்திராவில் அபாரமாக ஆட்சிக்கு வந்தவர், ஜெகன் மோகன் ரெட்டி. முதல்வரானதும் முதல் வேலையாக 5 துணை முதல்வர்களை பதவியில் அமர்த்தி, அதிரடி காட்டினார். அடுத்தகட்டமாக, இன்று டெல்லி விரைந்த ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 meets Amit Shah over special status for Andhra

அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கை நிலுவையில் உள்ளது குறித்து அமித்ஷா கவனத்திற்கு ஜெகன் எடுத்துச் சென்றார். டெல்லியில், நாளை, பிரதமர் தலைமையில், நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், ஆந்திராவின் நிலைப்பாட்டை எடுத்து வைக்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

5 தினங்கள் முன்பாக, ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. அப்போது, ஜெகன் மோகன் ரெட்டி, நேரடியாக சென்று, மோடியை வரவேற்று, சாமி தரிசனம் செய்யும்போதும் உடனிருந்தார். மத்திய அரசுடன், ஆந்திர முதல்வர் இணக்கமாக செல்ல விரும்புவதை இதுபோன்ற செயல்கள் எடுத்துக் காட்டின. அப்போது, ஆந்திராவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக மோடி அறிவித்தார்.

இந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்! இந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்!

இந்த நிலையில்தான், இன்றே டெல்லி விரைந்த ஜெகன் மோகன் ரெட்டி, அமித்ஷாவை சந்தித்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளை கைப்பற்றி சாதித்தவர் ஜெகன் மோகன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jagan Mohan Reddy after meeting Home Minister Amit Shah: The agenda of my visit was tomorrow's NITI Aayog meeting. Tomorrow we'll be presenting our case to the NITI Aayog, which is chaired by the Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X