டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜஸ்ட் மிஸ்.. மாட்டிய மைத்துனன்.. தப்பி ஓடிய மசூத் அசார்.. 3 அடுக்கு பாதுகாப்புடன் பதுங்கல்!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆத்திரத்தில் ஜெய்ஷ் இ முகமது | காஷ்மீரில் பதற்றம்- வீடியோ

    டெல்லி: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிறைய பாகிஸ்தான் ஊடகங்களே இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.

    காஸ்மீரில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டான். இதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்தியா இன்று பாகிஸ்தானில் மிக கடுமையான விமானப்படை தாக்குதலை நடத்தி இருக்கிறது.

    கொல்லப்பட்டான்

    கொல்லப்பட்டான்

    இந்தியா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொலை செய்யப்பட்டான். அதேபோல் மசூத் அசாரின் நெருக்கமான உறவினர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மசூத் அசாரின் ரத்த பந்தங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதுவும் ஆகவில்லை

    எதுவும் ஆகவில்லை

    ஆனால் இந்த தாக்குதலில் மசூத் அசாருக்கு எதுவும் ஆகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட எந்த தீவிரவாத முகாமிலும் மசூத் அசார் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மசூத் அசார் மிகவும் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

    அதே முறை

    அதே முறை

    பாகிஸ்தானின் அபோதாபாத்தில்தான் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தான். அவன் அங்கு பெரிய சுவர்கள் சுற்றப்பட்ட, பெரிய வீட்டிற்குள் பங்கருக்குள் பதுங்கி இருந்தான். அதேபோல்தான் தற்போது மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று புல்வாமா தாக்குதலின் போதே தகவல் வெளியானது.

    எஸ்கேப் ஆனான்

    எஸ்கேப் ஆனான்

    இந்த நிலையில் மசூத் அசார் ரவல்பண்டியில் இருந்து வெளியேறி கோதங்கி என்ற பாகிஸ்தானின் உட்பகுதியில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி உள்ளது. நேற்று முதல்நாளே மசூத் அசார், அங்கு சென்று பதுங்கிவிட்டதாகவும். அங்கு நிறைய ஜெய்ஷ் இ முகமது குழுவின் முகாம்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    மூன்று அடுக்கு

    மூன்று அடுக்கு

    இந்த நிலையில் முகமது அசாருக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவம் அவரை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவன் இப்படியே பதுங்கி இருப்பான் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Jaish chief Masood Azhar escaped from IAF attack in Pakistan, He went into safe hideout before Indian Attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X