டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடல்நிலை பாதிப்பு.. அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் அமைச்சரவையில் இடம்பெறவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    உடல்நிலை பாதிப்பு ! ஜேட்லி, சுஷ்மா அமைச்சரவையில் இடம்பெறவில்லை

    டெல்லி: உடல்நிலை பாதிப்பு காரணமாக அருண் ஜேட்லியும் சுஷ்மா ஸ்வராஜும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கூறியதால் அவர்கள் இடம்பெறவில்லை.

    குடியரசுத் தலைவர் மாளிகையில் 2-ஆவது முறையாக பாஜக அரசு பதவியேற்றுக் கொண்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.

    இதில் 9 பேருக்கு தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும் 24 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, ராம் விலாஸ் பாஸ்வான், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    தமிழகத்திலிருந்து 2 அமைச்சர்கள்தான்.. அதிமுகவுக்கு கல்தா.. ஏமாற்றத்தில் ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து 2 அமைச்சர்கள்தான்.. அதிமுகவுக்கு கல்தா.. ஏமாற்றத்தில் ஓபிஎஸ்

    இடம் வேண்டாம்

    இடம் வேண்டாம்

    இந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜும் இடம் பெறவில்லை. இருவரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என தெரிவித்துவிட்டனர்.

    கோயல் தாக்கல்

    கோயல் தாக்கல்

    அருண் ஜேட்லிக்கு கடந்த 18 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார்.

    உடல்நலனில் அக்கறை

    உடல்நலனில் அக்கறை

    தற்போது மீண்டும் அருண் ஜேட்லிக்கு மத்திய நிதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு நடைபெற்றது. ஆனால் அவரோ தனது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருப்பதால் தனக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இடம் பெறவில்லை

    இடம் பெறவில்லை

    இதையடுத்து நேற்று மாலை அருண் ஜேட்லியின் வீட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. இந்த நிலையில் இன்று பதவியேற்ற அமைச்சரவையில் அருண் ஜேட்லி இடம்பெறவில்லை.

    உடல்நிலை பாதிப்பு

    உடல்நிலை பாதிப்பு

    கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அது முதல் அவரது உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவதால் தனக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என தெரிவித்துவிட்டார்.

    English summary
    Jaitley and Sushma Swaraj not take place in Modi sarkar citing health conditions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X