டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையின் போது பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்கள் மறைந்திருந்த வீடியோ காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் முதல் இவர்கள் போராட்டம் தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக ஜாமியா பல்கலை மாணவர்கள் முயன்றார்கள்.

We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்! We shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்!

கண்ணீர் புகை

கண்ணீர் புகை

இந்த போராட்டம் நடந்த போது பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் நுழைந்தனர். அப்போது விடுதி, நூலகம் வரை சென்ற போலீஸார் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீஸார் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். லத்திகளை கொண்டு அவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மாணவிகளும் காயமடைந்தனர். வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த கலவரம் பெரும் சர்ச்சையானது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. எனினும் போலீஸார் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தவில்லை என்றும் கூறி வந்தனர்.

தாக்குதல்

தாக்குதல்

இதற்கான சிசிடிவி ஆதாரங்களும் மாயமானது. இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஜாமியா மிலியாவின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் நூலகத்தில் படித்து கொண்டிருந்த மாணவர்களை போலீஸார் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. லத்திகள் மூலம் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்திருக்கும் காட்சிகள்

இது போன்ற தாக்குதல் நடத்தப்படவே இல்லை என போலீஸார் முன்னர் கூறியிருந்தது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஏட்டிக்கு போட்டியாக பதிலுக்கு பதிலாக டெல்லி போலீஸாரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் கலவரம் நடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பல்கலைக்கழக பால்கனியில் கையில் கற்களுடன் மாணவர்கள் மறைந்திருக்கும் காட்சிகள் வெளியானது. இது குற்றப்பிரிவு போலீஸாரால் வெளியிடப்பட்டது. இந்த இரு வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.

English summary
Jamia violence: Another video released by Delhi police in which violence erupted on Dec 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X