டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதி சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Jammu Kashmir is internal matter of India

இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளித்தது. ரஷ்யா இந்தியாவின் பக்கம் இருப்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடு சபைகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது: வருமுன் காப்பதே சிறந்தது. எனவேதான் காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிலைமை சீரடைந்து விட்ட நிலையில் படிப்படியாக அந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட உள்ளன.

லடாக் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சமூக பொருளாதார உயர்வு ஏற்படுத்துவது இந்தியாவின் நோக்கம். இவை அனைத்துமே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

காஷ்மீர் விவகாரத்தில் தேவையில்லாமல் பதற்றத்தை உருவாக்கும் வேலைகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. அந்த நாடு முதலில் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சையது அக்பருதீன் தெரிவித்தார்.

English summary
Jammu Kashmir issue is entirely belonging to internal matters of India says India's representative for United Nations Syed Akbaruddin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X