டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிந்தது 14 மணி நேர மக்கள் ஊரடங்கு.. கடைகள் அடைப்பு, பேருந்து, ரயில்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவின் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு இன்று சிறப்பாக நடந்தது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆட்டோக்கள், பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள் ஓடவில்லை.

Recommended Video

    தொடங்கியது 14 மணி நேர மக்கள் ஊரடங்கு
    Janata Curfew will be implemented today at 7am

    கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்து மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 295-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    Janata Curfew will be implemented today at 7am

    இந்தியாவில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் மற்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் 4 அல்லது 5 ஆவது வாரத்தில் அதிகமாக இருந்தது. அது போல் இந்தியாவிலும் ஏற்பட்டு அனைவருக்கும் வைரஸ் பாதிக்கக் கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது.

    Janata Curfew will be implemented today at 7am

    இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனாவை 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    Janata Curfew will be implemented today at 7am

    இத்தாலி எங்கும் பிணக்குவியல்... ஒரே நாளில் 793 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 4,825இத்தாலி எங்கும் பிணக்குவியல்... ஒரே நாளில் 793 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 4,825

    அத்துடன் இன்று நாடு முழுவதும் கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது. அது போல் மெட்ரோ ரயில் பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது. சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Janata Curfew will be implemented today at 7am

    எனினும் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.

    English summary
    As per PM's advice Janata Curfew will be implemented at 7 am todau to fight the deadly virus Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X