டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு … பாகிஸ்தானுக்கு அறிவுரை

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவுரை- வீடியோ

    டெல்லி: தீவிரவாத அமைப்புகளை அழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கோனோ வலியுறுத்தி உள்ளார்.

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து ஜப்பானும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

    பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் ராணுவ நடவடிக்கைளை தவிர்க்க வேண்டும் எனவும் ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    [Read more: நீங்கள் செய்தது சரிதான்.. இந்தியாவிற்கு அமெரிக்கா மாஸ் சப்போர்ட்.. பீதியில் பாக்!]

    அமெரிக்கா ஆதரவு

    அமெரிக்கா ஆதரவு

    ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பேசி உள்ளார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமை இந்தியா அழிப்பதை ஆதரிப்பதாகவும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்திய தூதர் வலியுறுத்தல்

    இந்திய தூதர் வலியுறுத்தல்

    முன்னதாக, இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், இந்திய தூதர் நேரில் வலியுறுத்தினார்.

    மத்திய அரசு நடவடிக்கை

    மத்திய அரசு நடவடிக்கை

    இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து பேசிய நிலையில் மத்திய அரசு அடுத்தக்கட்டமாக இன்று ராஜாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    அத்துமீறி தாக்குதல்

    அத்துமீறி தாக்குதல்

    இதற்கிடையே, இன்று காலை 6 மணி முதல் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் படையினருக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனையடுத்து, அடுத்து ஒரு மணி நேரத்தில் தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது.

    English summary
    Japanese Foreign Minister Taro has urged the Pakistani government to take action against the terrorist organizations to destroy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X