டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாங்க இருக்கோம் மோடி" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு

லடாக் விவகாரம்.. இந்தியாவுக்கு ஜப்பான் தனது ஆதரவை தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சூப்பர்.. நச்சுன்னு நாலா பக்கமும் இந்தியா ஸ்டிராங் ஆகி வருகிறது.. லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் பகிரங்கமாகவும், வலுவாகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.. மேலும், எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிர்ப்பதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.

Recommended Video

    India-Japan Secret Plan Against China | Defence Intelligence | Oneindia Tamil

    இந்திய - சீன எல்லை விவகாரம் நடந்து வருகிறது.. இரு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்து உயிர்பலியும் ஏற்பட்டது.. இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.. அதேபோல சீனாவிலும் உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என்கிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது... இரு நாட்டுக்கும் விரிசல் விரிவடைந்து கொண்டே போகிறது.. இதனால் இரு நாடுகளுமே தங்களது வீரர்களையும், படைகளையும் எல்லையில் குவித்து வந்தன.

    ஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்ஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்

    வீரர்கள்

    வீரர்கள்

    நம் ராணுவ வீரர்கள் மோசமாக கொல்லப்பட்டபோதே, இந்தியா கொந்தளித்தது.. உடனே சீனா, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று ஆசுவாசப்படுத்தியது.. இதையடுத்து இந்த பதட்டத்தை தணிக்கும் வகையில், ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது.

    சம்மதம்

    சம்மதம்

    தொடர்ந்து நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்தும் ஏற்பட்டது.. உடனே தங்களது படைகளை விலக்கிக் கொள்ள ரெண்டு நாடுகளுமே சம்மதம் சொன்னார்கள்.. ஆனால், விஷயம் அதோடு போகவில்லை.. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்த்தால் பேச்சுவார்த்தையில் இன்னும் காரசாரம் தேவையோ? என்ற சந்தேகமும் எழுகிறது.

    எல்லை

    எல்லை

    இப்படிப்பட்ட சூழலில்தான், ஜப்பான் நமக்கு என்ட்ரி தருகிறது.. கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது... அத்துடன் எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிர்ப்பதாகவும் ஜப்பான் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதா் சட்டோஷி சுஸுகி இடையேயான சந்திப்பு டெல்லியில் நடந்தது.

    ஜப்பான் தூதர்

    ஜப்பான் தூதர்

    லடாக்கில் நடந்து வரும் நிலைமை மற்றும் இந்தியா என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்தெல்லாம் ஜப்பான் தூதருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு ஜப்பான் தூதர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "கிழக்கு லடாக் எல்லை பகுதி நிலவரம் குறித்தும், அந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் இந்தியாவின் கொள்கைகள் குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எடுத்து சொன்னார்... இந்த எல்லை பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று ஜப்பானும் நம்புகிறது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    எல்லையில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது.. இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து கப்பல்கள் கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வானது மகிழ்ச்சி அளிக்கிறது " என்று பதிவிட்டுள்ளார்.

    மோடி அரசு

    மோடி அரசு

    இது மோடி அரசுக்கு ஒரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது.. காரணம், சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராவது போலவே தெரிகிறது.. இதற்கு முன்பு அமெரிக்காவுடன் மட்டும்தான் ஜப்பான் இப்படி பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்து வந்துள்ளது.. ஆனால், இன்று இந்தியா பக்கம் ஜப்பான் வந்துள்ளது நல்லுறவுன் நல்ல அம்சமாகவே கருதப்படுகிறது.

    புதின்

    புதின்

    நேற்று முன்தினம்தான், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு போனை போட்டு வாழ்த்து சொன்னார்.. அத்துடன், இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.. இப்படி ரஷ்யாவுடன் நாம் உறவாடுவதையும், ஜப்பான் தாமாக வந்து நமக்கு ஆதரவு தெரிவிப்பதையும் கண்டு சீனாவின் பொருமல் அதிகமாகும் என்றே தெரிகிறது.

    English summary
    china, india: japanese support for india on ladakh issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X