டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு

Google Oneindia Tamil News

டெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு சிறப்பு மருத்துவக் குழு அமைக்க வேண்டும் என அப்போலோ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் 21 துறைகளைச் சேர்ந்த நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

jayalalitha death investigation: apollo hospital petition filed in supreme court

மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தங்களது ததகவல்களை தவறுதலாக புரிந்து கொண்டுள்ளதாகாவும், மருத்துவர்களின் பதிலை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும் அப்போலோ தனது மனுவில் புகார் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையை கடந்த வாரம் நிராகரித்ததுடன், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் உயர்நீதிமனறம் மறுத்துவிட்டது.

விடிஞ்சா வாக்கு பதிவு.. முதல் நாளில் பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரபேல் தீர்ப்பு.. ! விடிஞ்சா வாக்கு பதிவு.. முதல் நாளில் பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரபேல் தீர்ப்பு.. !

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக இன்று 9 மருத்துவர்கள் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

English summary
jayalalitha death investigation issue: apollo hospital petition filed in supreme court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X