டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணுபட்டுடுச்சோ.... பாஜக கூட்டணியில் முதல் புகைச்சல்.. கடும் கோபத்தில் நிதிஷ் அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: வெற்றியின் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியில் பாஜக செய்த செயலால் செம்ம கடுப்பில் இருக்கிறார் நிதிஷ்குமார். மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே தங்கள் கட்சிக்கு பாஜக கொடுத்ததால் அதை ஏற்காமல் நிராகரித்துள்ளதோடு, இனி அமைச்சரவையில் சேர மாட்டோம் என திட்டவட்டமாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

பீகாரில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 17 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், அவர்களின் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி 6 இடத்திலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

இந்த வெற்றியால் மோடி, நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான்(லோக் ஜன சக்தி) ஆகியோர் உற்சாகத்தில் இருந்தனர். குறிப்பாக ஜக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் மிகுந்த உற்சாகத்தில இருந்தார். தங்களது கட்சிக்கு 2 அமைச்சர் பதவியாவது கேட்டு இருந்தார். ஆனால் ஒரு அமைச்சர் பதவி மட்டுமே கொடுக்க முடியும் என பாஜக தலைமை சொல்லியிருக்கிறது.

"சைலண்ட் மோட்" தங்க தமிழ்செல்வன்.. அமமுகவில் என்ன நடக்க போகிறது.. புயல் வருமா.. புஸ்ஸாகுமா

மோடி அமைச்சரவை

மோடி அமைச்சரவை

இதனால் அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறவில்லை. அதேநேரம் பிரதமர் மோடியுடன் 58 அமைச்சர்கள் பதவிற்றனர். அதில் சிவசேனா, லோக் ஜனசக்தி, உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று இருந்தன.

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம்

மோடி அமைச்சரவையில் நிதீஷ்குமாரின் கட்சி எப்போது வேண்டுமானாலும் இடம் பெறலாம் என்றும் அதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அமைச்சரவையில் நிச்சயம் இடம் பெற மாட்டோம் என தெரிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு என்றும் அக்கட்சி சார்பில் பாஜக தலைமையிடம் கூறப்பட்டுள்ளதாம்.

இனி வாய்ப்பு இல்லை

இனி வாய்ப்பு இல்லை

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகி கேசி தியாகி கூறுகையில், பாஜக தரப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இடம் ஏற்புடையதாக இல்லை. எனவ வருங்காலத்திலும் பாஜக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறமாட்டோம். இதுதான் எங்களின் இறுதி முடிவு என்றார்.

அமைச்சரவை விரிவாக்கம்

அமைச்சரவை விரிவாக்கம்

இதற்கிடையே ஜக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி பீகாரில் நடந்து வருகிறது. இதில் புதிதாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதில் பாஜகவினர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை

English summary
JD(U) decided to not be a part of Modi's new Cabinet after BJP's offer of only one ministerial berth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X