டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல், பிரியங்காவிற்கு நன்றி.. காங்கிரஸ் நன்றாக செயல்பட்டது.. பாஜகவை அதிர வைத்த பிரசாந்த் கிஷோர்!

என்ஆர்சி மற்றும் சிஏஏவிற்கு எதிராக தீவிரமாக செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நன்றி என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து

Google Oneindia Tamil News

டெல்லி: என்ஆர்சி மற்றும் சிஏஏவிற்கு எதிராக தீவிரமாக செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நன்றி என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த மசோதாவை தொடக்கத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகாரில் இன்னொரு பக்கம் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிக்கு இடையிலும் கூட நிறைய குழப்பம் ஏற்பட்டது.

ஜே.என்.யூ. துணைவேந்தரை நீக்க வேண்டும்- காங். உண்மை அறியும் குழு வலியுறுத்தல் ஜே.என்.யூ. துணைவேந்தரை நீக்க வேண்டும்- காங். உண்மை அறியும் குழு வலியுறுத்தல்

என் டிவிட்

என் டிவிட்

இது குறித்து தற்போது பிரசாந்த் கிஷோர் டிவிட் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எல்லோருடனும் சேர்ந்து நானும் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் சிஏஏ மற்றும் மற்றும் என்ஆர்சியை எதிர்த்ததற்கு மிக்க நன்றி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள். அவர்களின் முயற்சி இதில் முக்கியமானது.

பீகாரில் இல்லை

பீகாரில் இல்லை

பீகாரில் கண்டிப்பாக என்ஆர்சி, சிஏஏ அமல்படுத்தப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியமான தலைவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் இப்போதும் பாஜகவின் கூட்டணியில்தான் இருக்கிறது.

என்ன சொன்னார்

முன்னதாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது இல்லை. இதை அவர்கள் சரியாக எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் நேற்றுதான் காங்கிரஸ் மாநில முதல்வர்கள் எல்லோரும் சிஏஏவை எதிர்க்க வேண்டும் என்று இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

நன்றி சொன்னார்

நன்றி சொன்னார்

இதையடுத்துதான் தற்போது பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் மிக சிறந்த அரசியல் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் மூன்று முறை மோடி முதல்வராக வெல்லவும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லவும் காரணமாக இருந்தவர்தான் பிரசாந்த் கிஷோர்.பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரஷாந்த் கிஷோர் பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார்

English summary
JDU Prashanth Kishore thanks Congress, Rahul and Priyanka Gandhi for their stand against CAA and NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X