டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள்- 24 பேர் 100% மதிப்பெண்கள்- தமிழக மாணவர்கள் யாரும் சென்டம் இல்லை

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 24 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் யாரும் 100% மதிப்பெண் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx இணையதளத்தில் பார்க்கலாம்.

25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல், லாக்டவுனால் ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

jee main result 2020 check online: link to be active soon

இந்த நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே செப்டம்பர் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 232 நகரங்களில் 660 மையங்களில் நடைபெற்றன.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் செப்டம்பவர் வரை 11.74 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 10.23 லட்சம் பேர் (74% மாணவர்கள்) மட்டுமே தேர்வுகளை எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் தேர்வுகள் நிறைவடைந்த 6 நாட்களிலேயே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 24 மாணவர்கள் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் வாரியாக 100% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: தெலுங்கானா- 8; டெல்லி- 5; ராஜஸ்தான் -4; ஆந்திரா-3; ஹரியானா-2; குஜராத்-1; மகாராஷ்டிரா-1

காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் 100% மதிப்பெண் பெறவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் கவுரவ் ஆர். கோச்சர் என்ற மாணவர் 99.99% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியரில் நிரூபமா என்ற பெண் 99.92% மதிப்பண் பெற்றுள்ளார் புதுவை மாநிலத்தில் மாணவர்கள் பிரிவில் விஸ்வநாதபள்ளி ராஜேஷ் 99.91% மதிப்பெண்கள் பெற்று முதலிம் பிடித்துள்ளார். புதுவையில் மாணவியர் பிரிவில் ரசாக நௌரின் என்ற மாணவி 97.98% மதிப்பெண்கள் பெற்றுளளார்.

இதில் கட் ஆப் மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 90.37 ஆகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 70.24 ஆகவும், ஒபிசிக்கு 72.88 எனவும், எஸ்சி பிரிவினருக்கு 50.17 ஆகவும், எஸ்டி பிரிவினருக்கு 39 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 0.06 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை காண்பதற்கான லிங்க் https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx இணையதளத்தில் ஆக்டிவேட் செய்யப்படுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகளை காணலாம்.

English summary
NTA JEE Main Result 2020: The results for the Joint Entrance Examination (JEE) Main has been released. The students who have appeared in the examination can check the results through the official website jeemain.nta.nic.in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X