டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டுக்கு 4 கட்டங்களாக ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்; பிப்.23- பிப். 26-ல் முதல் கட்ட தேர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்காக உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும் முதல் கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடத்தப்படும் என்றும் பொக்ரியால் கூறினார்.

ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் என்டிஏ எனப்படும் ஏஜென்சி நேற்று தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு அறிவிப்புகள் நீக்கப்பட்டன.

டிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்; செம்ப்டம்பரில் குரூப் 4 விஏஓ தேர்வுகள்!டிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்; செம்ப்டம்பரில் குரூப் 4 விஏஓ தேர்வுகள்!

JEE Mains 2021 exam dates announced

இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டார். இது தொடர்பாக பொக்ரியால் கூறுகையில், ஜேஇஇ தேர்வுகள் ஆண்டு முழுவதும் 4 கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றார். பின்னர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும் இந்த ஜேஇஇ தேர்வு ழுதலாம். ஒரு மாணவர் 4 முறையும் தேர்வுகளை எழுதலாம் என்றும் பொக்ரியால் தெரிவித்தார்.

ஜேஇஇ தேர்வுகளுக்கு

jeemain.nta.nic.in

என்ற இணையதளத்தில் இன்று முதலே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டில் தமிழ் உட்பட 13 மொழிகளில் ஜேஇஇ தேர்வுகள் எழுதலாம்.

English summary
Union Education Minister Ramesh Pokhriyal Nishank has said that JEE (Mains) 2021 exam will be held in four sessions in February, March, April & May. First session examination will be held from 23 to 26 Feb 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X