டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்: காங்.-ஜேஎம்எம்- ஆர்ஜேடி அணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும்- இந்தியா டுடே எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜே.எம்.எம்.- ஆர்.ஜே.டி. கூட்டணி 38 முதல் 50 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான முடிவுகள், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன.

காங். கூட்டணி ஆட்சி

காங். கூட்டணி ஆட்சி

ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்: காங்கிரஸ் ஜே.எம்.எம். மற்றும் ஆர்ஜேடி இணைந்த கூட்டணி கட்சிகளுக்கு 38 முதல் 50 இடங்கள் கிடைக்கும். இந்த கூட்டணி மொத்தம் 37% வாக்குகளைப் பெறும்.

பாஜகவுக்கு 22- 32 இடங்கள்

பாஜகவுக்கு 22- 32 இடங்கள்

பாஜக 22 முதல் 32 தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும். பாஜகவுக்கு மட்டும் 34% வாக்குகள் கிடைக்கலாம்.

ஏஜேஎஸ்யூவுக்கு 3- 5 இடங்கள்

ஏஜேஎஸ்யூவுக்கு 3- 5 இடங்கள்

ஏஜேஎஸ்யூவுக்கு 3 முதல் 5 இடங்களும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏஜேஎஸ்யூ 9% வாக்குகளையும், ஜேவிஎம் 6% வாக்குகளையும் பெறும்.

இதர கட்சிகள் நிலவரம்

இதர கட்சிகள் நிலவரம்

இதர கட்சிகளுக்கு 4 முதல் 7 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

English summary
According to the India Today Exit Polls, Cong-JMM leads with 38 to 50 seats in Jharkhand Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X