டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்.. ஜியோவுக்கு நெருக்கடி.. ஏர்டெல், வோடபோன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் ரிலையன்ஸ் நிறுவனத்தை மிகவும் பாதித்து வருகிறது. முகேஷ் அம்பானியை தலைவராக கொண்ட தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சக போட்டியாளர்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது.

இந்த நிறுவனங்கள் "தீய மற்றும் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை" நடத்தி வருகின்றன. விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி ஜியோ மொபைல் எண்களை தங்கள் நெட்வொர்க்குகளுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செயல்படுகின்றன எனறு ஜியோ குற்றம்சாட்டி உள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரச்சார செய்திகளை வாடிக்கையாளர்கள் மேற்கோள் காட்டி, ஏராளமான போர்ட்-அவுட் கோரிக்கைகளை பெற்றுள்ளதாக ஜியோ கூறியுள்ளது. ஆனால் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை புகாரை "ஆதாரமற்றவை" என்று மறுத்துள்ளன.

விவசாய சீர்திருத்தங்கள்... தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசைதிருப்புகின்றன: மோடிவிவசாய சீர்திருத்தங்கள்... தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசைதிருப்புகின்றன: மோடி

அம்பானிகளுக்கு சாதகம்

அம்பானிகளுக்கு சாதகம்

இதனிடையே இப்படியான பிரச்சனை தொலைத்தொடர்பு துறையில் எழுவதற்கு காரணம் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள். இந்த சட்டங்கள் அம்பானிகள் மற்றும் அதானிகளுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதா குற்றம்சாட்டி உள்ள விவசாயிகள், அம்பானி நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்று களம் இறங்கி உள்ளதாக தகவல்கள் பரவின.

பிரச்சாரங்கள்

பிரச்சாரங்கள்

இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (ட்ராய்) எழுதிய கடிதத்தில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பிரச்சாரங்கள் மேற்கொண்டுவருதாகவும் கூறியுள்ளது.

ஜியோ புகார்

ஜியோ புகார்

"ஏர்டெல் மற்றும் விஐஎல் (வோடபோன் ஐடியா லிமிடெட்) அதன் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இந்த தீய மற்றும் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. ஜியோ மொபைல் சந்தாதாரர்களை தங்கள் நெட்வொர்க்குகளுக்கு மாற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று போலித்தனமான கூற்றுக்களைக் கூறி பொதுமக்களைத் தூண்டுகிறார்கள், "என்று ஜியோ குற்றம்சாட்டி உள்ளது.

வோடபோன் மறுப்பு

வோடபோன் மறுப்பு

பாரதி ஏர்டெல் ட்ராய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: "இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை நாங்கள் உறுதியாக மறுக்க விரும்புகிறோம்.... எங்கள் வணிகம் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது என்று கூறியது. வோடபோன் ஐடியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் நிறுவனம் நெறிமுறைகளுடன் வணிகம் செய்கிறோம். இவை (ஜியோவின் குற்றச்சாட்டுகள்) எங்கள் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எங்களுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம், "என்றார்.

English summary
Farmers have been insisting that the contentious farm laws were pushed through to favour the Ambanis and the Adanis. Jio alleges Airtel and Vodafone using farm protests to draw out subscribers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X