டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது ஜியோவின் காலம்.. முகேஷ் அம்பானியின் அடுத்தடுத்த அதிரடி.. உலக அளவில் கோலோச்ச செம திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரிலையன்ஸின் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது தொடர் அந்நிய முதலீடு காரணமாக உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.

இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் ஜியோ தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது.

43,574 கோடி ரூபாயை பேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்துள்ளது .இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. அதோடு கூகுள், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக் கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்

கூகுள் எவ்வளவு

கூகுள் எவ்வளவு

ஜியோவில் கூகுள் நிறுவனம் மட்டும் 33737 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதேபோல் ஜியோவிற்கு அமெரிக்காவில் இருந்து மட்டும் மொத்தமாக செய்யப்பட்ட அந்நிய முதலீடு கடந்த மூன்று மாதங்களில் 16.7 பில்லியன் டாலர் ஆகும். இந்தியாவிற்கு கடந்த 10 வருடங்களில் அமெரிக்காவில் இருந்த வந்த மொத்த அந்நிய முதலீட்டை விட இது இரண்டு மடங்கு ஆகும்.

செம முன்னேற்றம்

செம முன்னேற்றம்

அந்த அளவிற்கு ஜியோ நிறுவனம் உலகளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள்தான் ஜியோவில் இப்படி முதலீடுகளை செய்கிறது. 2019 முழுக்கவே இந்தியாவில் டெக்னாலஜி துறையில் மட்டும் செய்யப்பட்ட மொத்த முதலீடு 9.36 பில்லியன் டாலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2000-2020ல் மொத்தமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க முதலீடு 29.78 பில்லியன் டாலர் ஆகும்.

ஜியோ சாதனை

ஜியோ சாதனை

அதில் 16.7 பில்லியன் டாலர் ஜியோ நிறுவனத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜியோவிடம் இருக்கும் மொத்த பங்குகளில் 27.61% பங்குகள் அமெரிக்க நிறுவனங்கள் கொண்டு இருக்கும் பங்குகள் ஆகும். இதனால் இந்தியாவில் அதிக அமெரிக்க நிறுவன பங்குகளை கொண்ட நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

எல்லா துறை

எல்லா துறை

ஜியோவில் தற்போது கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், இன்டெல், குவால்காம் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. இதனால் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம், மொபைல் விற்பனை, இ மார்க்கெட், கிளவுட் ஸ்டோரேஜ் சமூக வலைத்தளம் என்று பல விஷயங்களில் ஜியோ கவனம் செலுத்த போகிறது என்று கூறுகிறார்கள். ஜியோவின் திட்டம் தற்போது சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு மாற்றாக வருவதுதான் என்று கூறுகிறார்கள்.

ஹுவாவே மாற்று

ஹுவாவே மாற்று

பாதுகாப்பு குறைபாடு மற்றும் தகவல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஹுவாவே நிறுவனத்திற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை விதித்து உள்ளது. தற்போது ஹுவாவே நிறுவனத்தின் இடத்தை பிடிக்க ஜியோ முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் வளர்வது ஜியோவின் திட்டம் கிடையாது . உலக அளவில் ஜியோ கால் பதிக்க உள்ளது என்று கூறுகிறார்கள்.

சீனா போட்டி

சீனா போட்டி

அதன்படி சீனாவின் டாப் 1 டெலிகாம் நிறுவனத்திற்கு மாற்றாக ஜியோ வர முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்க நிறுவனங்கள் முழு ஆதரவை வழங்குகிறது. ஹுவாவே உள்ளிட்ட சீனாவின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களையும் காலி செய்துவிட்டு, அதன் இடத்தில் ஜியோவை அமர வைப்பதுதான் நோக்கம். இதுதான் ஜியோ அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க காரணம் என்கிறார்கள்.

English summary
JIO raises to top after investment surges from Facebook, Google and Intel in the Mukesh company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X