டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) சட்டசபை தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்ஜேபி இடம்பெற்றிருந்தது.

Jkharkhand Assembly elections: LJP to contest 50 in seats, says Chirag Paswan

ஆனால் எல்ஜேபி கேட்ட தொகுதிகளை பாஜக ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி முதலில் 37 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது. இதில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிடுவோம் எனவும் கூறியது.

சிவசேனாவுடன் சிக்கல் இல்லை- தேசியவாத காங்-க்குதான் முதல்வர் பதவி- காங். அடம்பிடிப்பதால் இழுபறி?சிவசேனாவுடன் சிக்கல் இல்லை- தேசியவாத காங்-க்குதான் முதல்வர் பதவி- காங். அடம்பிடிப்பதால் இழுபறி?

இந்நிலையில் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எல்ஜேபி தனித்து 50 தொகுதிகளில் போட்டியிடும். இது கட்சியின் ஜார்க்கண்ட் மாநில பிரிவு எடுத்த முடிவு என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்கனவே நிதிஷ்குமாரின் ஜேடியூ, மாணவர் அமைப்பான ஏஜேஎஸ்யூ ஆகியவையும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன.

English summary
LJP leader Chirag paswan has announced that his party will contest alone in 50 seats in Jkharkhand Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X