டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுடன் இருப்போம்.. கனிமொழியை தொடர்ந்து களமிறங்கிய உதயநிதி.. ஜேஎன்யூ மாணவர்களுடன் சந்திப்பு!

ஜேஎன்யூ தாக்கப்பட்ட மாணவர்களை இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று நேரில் சந்தித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேஎன்யூ தாக்கப்பட்ட மாணவர்களை இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று நேரில் சந்தித்தார்.

இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக, ஜேஎன்யூ பார்க்கப்படுகிறது. ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபிதான் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களை கடந்த வாரம் திமுக மூத்த உறுப்பினர் எம்பி கனிமொழி நேரில் சந்தித்தார். அதேபோல், ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷா கோஷை சந்தித்து ஆதரவு அவர் அளித்தார். டெல்லியில் ஐஷா தங்கியிருக்கும் வீட்டிற்கு நேரடியாக கனிமொழி சென்றார்.

உதயநிதி

உதயநிதி

இன்று ஜேஎன்யூ மாணவர்களை இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று நேரில் சந்தித்தார். டெல்லி விமான நிலையத்தில் ஜேஎன்யூவில் படிக்கும் திமுக மாணவரணி அமைப்பினர் வரவேற்றனர். அங்கிருந்து ஜேஎன்யூ சென்று உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த மாணவர்களை சந்தித்தார்.

ஸ்டாலின் என்ன சொன்னார்

ஸ்டாலின் என்ன சொன்னார்

மாணவர்களிடம் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தாக்குதல் எப்படி நடந்தது? போலீஸ் என்ன செய்தது. போலீஸ் உங்களை எப்படி நடத்துகிறது என்று கேட்டறிந்தார். சிஏஏ எதிர்ப்பு போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

உங்களுடன் இருக்கிறேன்

பின் மாணவர்களிடம், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் எப்போதும் இருப்போம். நீங்கள் களத்தில் துணிந்து நில்லுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இன்று மாலை

இன்று மாலை

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து இன்று மாலை ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷே கோஷை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

English summary
JNU attack: After Kanimozhi, Udhaynidhi Stalin met students of the university.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X