டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடுதி காவலரை தாக்கிவிட்டனர்.. ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது எப்ஐஆர் பதிவு!

டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 premier universities affected by police and masked men

    டெல்லி: டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அங்கு விடுதி காவலரை தாக்கியதாக மேலும் 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    நேற்று முதல்நாள் மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். சில மாணவர்கள் இதில் மிக மோசமாக தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அத்துமீறி அட்டகாசம் செய்த திண்டுக்கல் சாய்.. ஷாக் ஆன போலீஸ்!11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அத்துமீறி அட்டகாசம் செய்த திண்டுக்கல் சாய்.. ஷாக் ஆன போலீஸ்!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை அடையாளம் தெரியாத நபர்கள் மீது மட்டும்தான் புகார் பதியப்பட்டு இருக்கிறது. அந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று இணையத்தில் நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. குற்றவாளிகள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைது இல்லை

    கைது இல்லை

    ஆனால் இதில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒருவர் மீது கூட நேரடியாக இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் போலீஸ் ஜேஎன்யூயின் மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    வழக்கு

    வழக்கு

    இவர் மீது ஜேஎன்யூவின் விடுதி பாதுகாவலவரை தாக்கியதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு இருந் சர்வர் அறையை கடந்த 4ம் தேதி இவர் தாக்கியதாகவும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது உள்ளது. அதற்கு மறுநாள் 5ம் தேதிதான் ஜேஎன்யூவில் இடதுசாரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த எப்ஐஆர் அவர் மீது மட்டும் பதியபடவில்லை. காவலரை தாக்கியதாக மேலும் 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அனைவரும் இடதுசாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு பதியப்பட்டு இருக்கும் 19 பேரில் ஐஷே கோஷ் உட்பட 15 பேர் மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    English summary
    JNU Attack: Delhi police files FIR against Aishe Ghosh and 19 Others for attacking security in hostel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X