டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை தாக்கி கொல்ல பார்த்தனர்.. ஆனால் போலீஸ் என்னையே குற்றவாளி என்கிறது.. பொங்கும் ஐஷே கோஷ்!

ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலின் போது மர்ம நபர்கள் என்னை தாக்கி கொலை செய்ய பார்த்தனர், ஆனால் போலீசார் இப்போது என்னையே குற்றவாளி என்று ஜோடிக்கிறது என்று ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவி ஐஷே கோஷ் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலின் போது ஏபிவிபி உறுப்பினர்கள் என்னை தாக்கி கொலை செய்ய பார்த்தனர், ஆனால் போலீஸ் இப்போது என்னையே குற்றவாளி என்று ஜோடிக்கிறது என்று ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவி ஐஷே கோஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபிதான் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது.

ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷா கோஷ் இந்த தாக்குதலில் மிக மோசமாக காயம் அடைந்தார். தலையில் அடிபட்ட நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்? சேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்?

எனக்கு அச்சம்

இது தொடர்பாக ஐஷே கோஷ் செய்துள்ள டிவிட்டில், ஜேஎன்யூ தாக்குதல் எனக்கு அச்சம் தருகிறது. எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தாக்குதலையும், புகைப்படங்களையும் நான் கடந்து வந்துவிடுவேன். ஆனால் உங்கள் எல்லோரிடமும் ஒன்று கேட்கிறேன். என்னை கொலை செய்ய முயன்று இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் என் மேல் குற்றவாளி பழியை சுமத்துகிறது.. ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கொலை முயற்சி

இன்னொரு டிவிட்டில், நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே தாக்கப்பட்டோம். எங்களை மோசமாக தாக்கினார்கள். கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் எதுவும் பேசவில்லை. எதுவும் சொல்லவில்லை.

அமைதி போராட்டம்

நாங்கள் அமைதியாக போராடினோம். நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் எங்கள் உரிமையை கேட்கிறோம். நாங்கள் நாட்டின் நன்மைக்காக ஒன்றாக சேர்ந்து நிற்கிறோம். நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள்

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் ஐஷே கோஷை திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று சந்தித்தார். அவர்களின் போராட்டத்திற்கு கனிமொழி ஆதரவு கரம் நீட்டினார்.

English summary
JNU attack: Delhi Police named me as a suspect even after the deadly attack says Aishe Ghosh in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X