டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜேஎன்யு வன்முறையில் திருப்பம்.. டேட்டாவை கேட்டு வழக்கு.. வாட்ஸ்அப் கூகுளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது| Delhi police identifies masked woman

    டெல்லி: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பான சமூக வலைதள பதிவுகளை பாதுகாக்க கோரிய இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வாட்ஸ்அப், கூகிள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. .

    மூன்று ஜே.என்.யூ பேராசிரியர்கள் - அமீத் பரமேஸ்வரன், சுக்லா சாவந்த் மற்றும் அதுல் சூத் ஆகியோர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) ஜனவரி 5-ல் நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி மனுதாக்கல் செய்தனர்.

    இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி அரசாங்கத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.

     ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள்

    ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள்

    பேராசிரியர்கள் :மூன்று பேரும் வாட்ஸ்அப் குழுக்களில் '' இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை '' மற்றும் '' ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள் '' ஆகிய குழுக்களின் தரவை மீட்டெடுக்க என்று வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

    ஜேஎன்யு வன்முறை

    ஜேஎன்யு வன்முறை

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.என்.யுவில் நடந்த வன்முறை தொடர்பாக அங்கு படிக்கும் மாணவர்களின் செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை அந்த டேட்டாவில் இடம்பெற்றுள்ளளது.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    அவற்றை பாதுகாக்க கோரிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பதில் அளித்த டெல்லி போலீசார், ஜேஎன்யு பல்கலைக்கழகம் உள்பட 1,000 ஏக்கர் வளாகத்தில் நிறுவப்பட்ட 135 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அவர்கள் கோரியதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    கூகுள் ஆப்பிளுக்கு நோட்டீஸ்

    கூகுள் ஆப்பிளுக்கு நோட்டீஸ்

    இதையடுத்து ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பான சமூக வலைதள பதிவுகளை கோரிய இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வாட்ஸ்அப், கூகிள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. . டெல்லி காவல்துறை மற்றும் மாநில அரசிடமிருந்தும் நீதிமன்றம் பதில்களைக் கோரியுள்ளது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    high Court Notice To WhatsApp, Google, Facebook, Apple On Plea To Save Data over JNU Attack
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X