டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜேஎன்யூ தாக்குதல்.. ஸ்டாலின் கண்டனம்.. பாசிசவாதிகள் கையில் நாடு சிக்கிவிட்டதாக ராகுல் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

JNU attack: MK Stalin, Rahul Gandhi condemn

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற ஆம்புலன்ஸ்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் ஸ்டாலின் கூறுகையில்,


முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யூ வளாகத்திற்குள், மாணவர்களைத் தாக்கும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்க்குப் பின்னர் பல்கலைக்கழகங்களுக்குள், மாணவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை திமுக கண்டிக்கிறது
இந்த சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை முகமூடி அணிந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலரும் மோசமான அளவுக்கு காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பாசிசவாதிகள் கையில் நாடு சிக்கியுள்ளது. தைரியமிக்க மாணவர்களின் குரலைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த வன்முறைச் சம்பவம் என்பது அவர்களின் அச்சத்தை காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், தொலைக்காட்சி சேனலில் பார்த்த காட்சிகள் பயங்கரமாக உள்ளன. அதிர்ச்சி அளிக்கின்றன. முகமூடி அணிந்தவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஹாஸ்டலுக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போர்க்களமான ஜேஎன்யூ வளாகம்.. ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.. போலீஸ் குவிப்பு.. கெஜ்ரிவால் அதிர்ச்சிபோர்க்களமான ஜேஎன்யூ வளாகம்.. ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.. போலீஸ் குவிப்பு.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? போலீஸ் கமிஷனர் எங்கே? டிவி சேனல்கள் லைவாக வீடியோ காண்பித்துக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதை பார்க்கும்போது கண்டிப்பாக அரசின் ஆதரவோடு தான் தாக்குதல் நடைபெற்று இருக்கவேண்டும். நம்பமுடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.

English summary
Shocked to see visuals of masked miscreants attacking JNU students inside the campus. DMK condemns rising incidents of violence against students within universities in the aftermath of CAA2019 All those who are responsible for these incidents must brought to book immediately, says MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X