டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த வாட்ஸ் குழுவில் இருந்தவர்களை கண்டுபிடியுங்கள்.. ஜேஎன்யூ தாக்குதலில் டெல்லி ஹைகோர்ட் பொளேர்!

ஜேஎன்யூவின் மாணவர்கள் மீதான தாக்குதலை திட்டமிடுவதற்காக இயங்கி வந்த வாட்ஸ் குழுவில் இருந்தவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேஎன்யூவின் மாணவர்கள் மீதான தாக்குதலை திட்டமிடுவதற்காக இயங்கி வந்த வாட்ஸ் குழுவில் இருந்தவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது. மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் கடந்த வாரம் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக நிறைய பேர் வாக்குமூலம் அளிக்க தொடங்கி உள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. நிறைய வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது.

7 மாதத்திற்கு முன்பே ஓகே சொன்ன டிரம்ப்.. ஸ்கெட்ச் போட்ட சிஐஏ.. சுலைமானி கொலையின் பரபர பின்னணி!7 மாதத்திற்கு முன்பே ஓகே சொன்ன டிரம்ப்.. ஸ்கெட்ச் போட்ட சிஐஏ.. சுலைமானி கொலையின் பரபர பின்னணி!

என்ன வாட்ஸ் ஆப்

என்ன வாட்ஸ் ஆப்

இந்த தாக்குதல் மொத்தமும் வாட்ஸ் ஆப் மூலம்தான் திட்டமிட்டப்பட்டுள்ளது. ஏபிவிபி அமைப்பிற்கு சொந்தமான இடதுசாரிகளுக்கு எதிரான அணி என்ற வாட்ஸ் ஆப் குழுவில்தான் இந்த தாக்குதல் திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள். அதன்பின்தான் மிக கச்சிதமாக மாணவர்களை வாட்ஸ் ஆப் குழுவில் திட்டம்போட்டது போலவே தாக்கியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் குழு

வாட்ஸ் ஆப் குழு

இந்த குழுவில் பேசப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஸ்கிரீன் ஷாட் மூலம் இணையத்தில் வெளியானது. இதுதான்
ஏபிவிபி மாணவர் அமைப்பை சிக்கலுக்கு உள்ளாக்கியது. இந்த தாக்குதலுக்கு எதிரான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு டெல்லி ஹைகோர்ட் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி விசாரித்து வருகிறார்.

இல்லை

இல்லை

அவர் கடந்த விசாரணையின் போது வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இது தொடார்பாக நோட்டீஸ் அனுப்பினார். இந்த வாட்ஸ் ஆப் பரிவர்த்தனை தொடர்பான விவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் இந்த வாட்ஸ் ஆப், குழுவில் பேசப்படும் விஷயங்களை, இருவர் பேசிக்கொள்ளும் விஷயங்களை எங்கள் நிறுவனத்தால் பார்க்க முடியாது. குழுவில் இருக்கும் நபர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் பதில் அளித்தது.

மீண்டும் கேள்வி

மீண்டும் கேள்வி

இதையடுத்து நீதிபதி பிரிஜேஷ் சேத்தி டெல்லி போலீசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த குழுவில் இருந்த எல்லா நபர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் எல்லோரிடம் இருந்தும் போன்களை கைப்பற்ற வேண்டும். அவர்கள் எல்லோரையும் விசாரிக்க வேண்டும்.

என்ன குழுக்கள்

என்ன குழுக்கள்

இது தொடர்பாக இரண்டு வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் நண்பர்கள் என்றும் இன்னொரு குழு இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு குழுக்கள் தொடர்பாக அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி பிரிஜேஷ் சேத்தி உத்தரவிட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே டெல்லி ஜேஎன்யூ சிசிடிவி வீடியோக்களை போலீசிடம் நீதிபதி கேட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
JNU attack: Find them and seize their phone, Delhi HC order police on What's App group evidence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X