டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதே உங்களுக்கு வழக்கமா போச்சு.. இதெல்லாம் பத்மாவத் படத்துலேயே பார்த்துட்டேன்.. தீபிகா படுகோன் பதிலடி

தன்னுடைய சப்பக் படத்திற்கு பாஜகவினரும் வலதுசாரி கொள்கை கொண்டவர்களும் எதிர்ப்பதை நான் முன்பே எதிர்பார்த்தேன், இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது என்று தீபிகா படுகோன்

Google Oneindia Tamil News

Recommended Video

    JNU போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன் - வீடியோ

    டெல்லி: தன்னுடைய சப்பக் படத்திற்கு பாஜகவினரும் வலதுசாரி கொள்கை கொண்டவர்களும் எதிர்ப்பதை நான் முன்பே எதிர்பார்த்தேன், இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது என்று தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் முன் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிராக நேற்று இரவு ஜேஎன்யூவில் போராட்டம் நடந்தது.

    பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நேற்று ஜேஎன்யூவில் தாக்கப்பட்ட மாணவர்களை சென்று நேரில் சந்தித்தார். ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் ஐஷா கோஷ் உடன் அவர் பேசினார். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.

    நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. தைரியமாக இருங்கள்.. ஜேஎன்யூ மாணவ சங்க தலைவியை சந்தித்த கனிமொழி!நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. தைரியமாக இருங்கள்.. ஜேஎன்யூ மாணவ சங்க தலைவியை சந்தித்த கனிமொழி!

    என்ன எதிர்ப்பு

    என்ன எதிர்ப்பு

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த தீபிகா படுகோன், நாங்கள் பயப்படவில்லை. எங்கள் குரலை எங்களால் தைரியமாக வெளிப்படுத்த முடிகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார். தனி பெண்ணாக களமிறங்கி தீபிகா இப்படி பேசியது பலருக்கும் ஆச்சர்யமானது. தீபிகாவுக்கு எதிராக இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    பாஜக ஆதரவாளர்கள் தீபிகா படுகோன் நடிக்கும் புதிய படமான சப்பக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று டிவிட் செய்து வருகிறார்கள். அந்த படத்தில் இந்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். வில்லனுக்கு இந்துக்களின் பெயர்களை வைத்துள்ளனர் என்று இணையத்தில் புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

    படம் பார்க்க வேண்டாம்

    படம் பார்க்க வேண்டாம்

    இதற்காக இணையத்தில் தற்போது பாஜக ஆதரவாளர்கள் சப்பக் படத்திற்கு எதிராக #boycottchhapaak என்ற டேக்கை உருவாக்கி உள்ளனர். இந்த டேக் காலையில் இருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. வலதுசாரி கொள்கை கொண்ட பலர் இந்த டேக்கில் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

    என்ன கருத்து

    என்ன கருத்து

    இதுகுறித்து தற்போது தீபிகா படுகோன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எனக்கு எதிராக இப்படி போராட்டம் செய்வார்கள் என்று தெரியும். பத்மாவத் படம் வந்த போதே இப்படித்தான் நடந்தது. அப்போதே என்னுடைய நிலைப்பாட்டை இதுபோன்ற போராட்டங்களில் நான் கூறிவிட்டேன்.

    வலிக்கிறது

    வலிக்கிறது

    இது போன்ற விஷயங்கள் இந்தியாவில் வழக்கமான ஒன்றாக மாறுவது வருத்தம் அளிக்கிறது. எல்லோரும் எது வேண்டுமானாலும் செய்யலாம், அதில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்க கூடாது. இது எனக்கு வலிக்கிறது. கொஞ்சம் அச்சமாக இருக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    அப்படி ஒரு சூழ்நிலை உருவாகிவிட கூடாது. இந்தியாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்தியா எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.

    என்ன படம்

    என்ன படம்

    தீபிகாவின் சப்பக் படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்னின் கதையாகும். இதன் டீசர், டிரைலர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பத்மாவத் படத்தின் போது, ராணி பத்மினி குறித்து தவறாக காட்சிகள் இருந்ததாக தீபிகா படுகோனுக்கு எதிராக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    JNU: I have seen this kind of agitations in Padmavat movie itself says Deepika Padukone, Sacred about India's future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X