டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபாவில் வெடித்த ஜேஎன்யூ விவகாரம்.. எதிர்க்கட்சிகள் பெரும் அமளி.. அவை ஒத்திவைப்பு!

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்துவது தற்போது ராஜ்யசபாவில் எதிரொலித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஸ்வரூபமெடுக்கும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்| JNU Students to hold protest in streets

    டெல்லி: டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்துவது தற்போது ராஜ்யசபாவில் எதிரொலித்துள்ளது. இதனால் ராஜ்யசபாவில் பெரிய அமளி ஏற்பட்டு, அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    கட்டண உயர்விற்கு எதிராக டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் 300% கூடுதலாக உயர்த்தப்பட்டது.

    JNU Protest erupts in Rajya Sabha too: Speaker adjourned the house till 2 pm

    இதற்கு எதிராக ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். ஆனால் ஜே.என்.யூ. மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜேஎன்யூ பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. லோக்சபாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அங்கு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும், மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.

    அதேபோல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. ஜேஎன்யூ விவகாரம் அதன்பின் ராஜ்யசபாவிலும் வெடித்தது.

    இதே கோரிக்கையுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ராஜ்யசபாவில் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் சபாநாயகர், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஜேஎன்யூ குறித்து விவாதிக்க அனுமதி தரவில்லை.

    இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினார்கள். இதையடுத்து தொடர் அமளியால் இன்று மதியம் வரை ராஜ்யசபா விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    JNU Students Protest erupts in Rajya Sabha too: Speaker adjourned the house till 2 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X