டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.. டெல்லியில் பதற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்

    டெல்லி: விடுதி கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் இன்று ஜே.என்.யூ மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    JNU protest: Police laathi charge on students

    ஜே.என்.யூ. பல்கலைக் கழக விடுதி கட்டணங்கள் 300% உயர்த்தப்பட்டது. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது. இவற்றை கைவிட வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை எழுந்தது.தகவல் கிடைத்ததும் எஞ்சிய மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், காவல்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதை பார்க்கும்போது, அரசுக்கு மாணவர்கள் மீது உள்ள பயம் நன்கு தெரிகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வு மிக அதிகமாகும். இதை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார்.

    இதனிடையே, டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் மந்தீப் ரன்ட்டாவா கூறுகையில், மாணவர்கள் கோரிக்கை குறித்து பேச காவல்துறை தயாராக உள்ளது. ஆனால், சட்டத்தை அவர்கள் கைகளில் எடுக்க கூடாது. காவல்துறை தடியடி நடத்தியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து விசாரிக்கிறோம் என்றார்.

    நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல ஜே.என்.யூ மாணவர்கள் முயற்சி செய்ததால், நாடாளுமன்றம், அருகிலுள்ள மூன்று டெல்லி மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. "டெல்லி காவல்துறை அறிவுறுத்தியபடி, மத்திய செயலகம், உத்யோக் பவன் மற்றும் படேல் சவுக் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படவில்லை. இங்கெல்லாம் வெளியேறும் மற்றும் நுழைவு வாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன" என்று டெல்லி மெட்ரோ ட்வீட் செய்துள்ளது.

    English summary
    Mandeep S Randhawa, Delhi Police PRO: We are trying to talk to the students about their demands and convince them to not take law in their hands. Regarding the allegation of laathi charge, we will inquire into it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X