டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முகமூடி மனிதர்கள் குறித்து தகவல் அளித்தோம்.. ஆயிஷ் கோஷ்

Google Oneindia Tamil News

Recommended Video

    JNU போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன் - வீடியோ

    டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

    இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி முகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி

    போன்

    போன்

    இதுகுறித்து மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கல்லூரி வளாகத்தில் எப்போது சமூக விரோதிகளை பார்த்தோமோ உடனடியாக வசந்த்கஞ்ச் காவல் நிலைய அதிகாரிக்கு நான் பல முறை போன் செய்தேன்.

    துரதிருஷ்டவசம்

    துரதிருஷ்டவசம்

    வாட்ஸ் ஆப்பில் மெசேஜும் அனுப்பினோம். வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பிவிட்டோம். டெல்லி போலீஸ் நினைத்திருந்தால் எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தாத வண்ணம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார்.

    அனுமதி

    அனுமதி

    இதுகுறித்து போலீஸார் கூறும் போது ஜாமியா பல்கலைக்கழகத்தில் எப்போது நாங்கள் அனுமதியில்லாமல் சென்றதை பெரிய பிரச்சினையாக எழுப்பினர். அதனால் டெல்லி ஜேஎன்யுவில் 7 மணிக்கு நுழைவதற்கு அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் நுழைந்தோம் என்றனர்.

    ஆர் எஸ் எஸ்

    ஆர் எஸ் எஸ்

    மேலும் சிலர் ஞாயிற்றுக்கிழமை 2.30 மணி முதல் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 50-க்கும் மேற்பட்ட முறை போலீஸுக்கு போன் செய்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை என்கின்றனர். மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ், ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர் என வாட்ஸ்ஆப்பில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Aishe Ghosh says that we had made several calls to Delhi police about miscreants entered in to university campus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X