• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா?

|
  பாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி. நட்டா | BJP new national president J.P.Nadda ?

  டெல்லி: பாஜக தலைவராக ஜேபி நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. யார் இந்த ஜேபி நட்டா? தேசிய கட்சியின் தலைவராக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியம் வாய்ந்தவராக கருதப்பட காரணம் என்ன?

  ஜேபி நட்டா! முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்!! மோடி பிரதமராக பொறுப்பேற்ற போதே அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர்.. இவர்தான் கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை அப்போதே ஏற்படுத்தியவர்.. அடுத்த முறை ஆட்சியிலும் இதே பெயர் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கிறது.

  அன்று 57 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில் நட்டாவின் பெயர் இல்லைதான்.. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கட்சிக்குள் காத்திருப்பதாக அன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியே இருந்தன.

  பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு!பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு!

  பாட்னா

  பாட்னா

  ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் நட்டா.. ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் பாட்னாவில்தான்.. மல்லிகா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர். ஏபிவிபி மாணவர் இயக்கத்தின் தலைவர்.

  முக்கிய பங்கு

  முக்கிய பங்கு

  இந்த இளைஞரின் வேகம் கட்சியின் அடிமட்ட தொண்டரைகூட வியக்க வைத்தது.. அதனால்தான் மோடி, அமித்ஷாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.. பாஜகவின் இளைஞர் அணி பிரிவு தலைவராக மிளிர்ந்தார்.. 1993-ல் ஹிமாச்சல பிரதேசத்தின் எம்எல்ஏவாக உயர்ந்தார்.. சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.. முக்கிய அதிகாரங்கள் கொண்ட, பாஜக நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

  ராஜபுத்திர இனம்

  ராஜபுத்திர இனம்

  2017ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேச தேர்தலில், தூமல் தோல்வியை தழுவியபோதும் அந்த பதவிக்கு நட்டாதான் பரிசீலனையில் இருந்தார்.. எனினும் ராஜபுத்திர இனத்தை சேர்ந்த ஒருவர்தான் அப்போதே தேவை என்பதால், பிராமண குடும்பத்தை சேர்ந்த நட்டாவால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை.

  அமித்ஷா

  அமித்ஷா

  மோடி ஆட்சியின் ஆரம்பத்தில் இருந்தே முக்கிய பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் இவரது பெயர் அடிபட்டு கொண்டே இருந்து வந்திருக்கிறது.. இப்போதும் அப்படித்தான் கட்சி தலைவர் பதவிக்காக நட்டா தேர்வாகிறார்... உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷாவினால், கட்சி தலைவராகவும் சேர்த்து பொறுப்பேற்க முடியாது.. பாஜக சட்டத்தில் அதற்கு இடமில்லை.. அதனால்தான் வேறு ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட நேரும்போது, தானாகவே நட்டா பெயர் முன்வந்து விழுந்தது.

  அனுபவ அரசியல்

  அனுபவ அரசியல்

  இதற்கு மிக முக்கிய காரணம், நட்டாவின் அனுபவ அரசியல்தான்.. போன எம்பி தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து கூட்டணி வைத்தது பாஜகவுக்கு பெரிய சவாலாக இருந்தது.. அதை எப்படி எதிர்கொள்வது என்ற இக்கட்டான சூழலுக்கும் ஆளானது.. அமித்ஷாவின் முயற்சி பெரிதும் இருந்தாலும், நட்டா செய்து தந்த வியூகங்கள்தான் அப்போது பெரிதும் அக்கட்சிக்கு கைகொடுத்தது.. பிரச்சாரமே வித்தியாசமாக இருந்தது.. இதற்கு காரணம் நட்டாதான்.

  ஆல் டைம் ஃபேவரைட்

  ஆல் டைம் ஃபேவரைட்

  எப்படி வெற்றி பெற போகிறோமோ என்ற கலக்கத்தில் இருந்தபோது, இறுதியில் 80 இடங்களில் 62 இடங்களை பாஜக வென்று சாதனை படைத்தது. இதனால் கட்சியில் இன்னும் செல்வாக்கும், மரியாதையும், நம்பிக்கையும் நட்டா மேல் விழ தொடங்கியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அதிரடி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் நட்டா.. அமைதியான அரசியலை பெரிதும் நேசிக்கக்கூடியவர்.. அமித்ஷா, மோடியின் ஆல் டைம் ஃபேவரைட்.. எந்த சர்ச்சையிலும் சிக்காத நட்டாவுக்கு இது போன்ற பல சாதகங்கள்தான் இன்று கைகூடி வந்துள்ளன... போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நட்டா இந்த பதவிக்கு மிக்க தகுதியானவர்.. பொருத்தமானவர்!

  பெரிய எதிர்பார்ப்பு

  பெரிய எதிர்பார்ப்பு

  அதனால் வரக்கூடிய காலக்கட்டங்களில் இவரது செயல்பாடுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. தலைதூக்கி வரும் சிஏஏ விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை இவர் எப்படி சமாளிப்பார், ஆங்காங்கே நிலவிவரும் பாஜகவின் அதிருப்திகளை இவர் எப்படி கையாளுவார், வலிமை பொருந்தி வரும் எதிர்க்கட்சிகளை இவர் எப்படி எதிர்கொள்வார், மதச்சார்பின்மை இந்தியாவை உருவாக்க, கையாள போகும் யுக்திகள், முயற்சிகள் என்னென்ன என்பன போன்ற பல எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே ஜேபி நட்டா ஏற்படுத்தி வருகிறார்!!

  English summary
  former central minister jp nadda take over bjp national president
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X