டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.. ஜேபி நட்டா அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அந்த சட்டம் கொரோனா வைரஸால் தாமதமானது என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு மேல் இந்தியாவில் தங்கியுள்ள கிறிஸ்துவர்கள், இந்துக்கள், பார்சிகள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் ஜெயின மதத்தினர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே இந்த சட்டமாகும்.

JP Nadda says that CAA will be implemented soon

இந்த பட்டியலில் இலங்கை தமிழர்கள், முஸ்லீம்களை சேர்க்காததால் இதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார்.

பிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்பிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்

அவர் கூறுகையில் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இது கொரோனா வைரஸால் தாமதமானது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அனைத்து தரப்பினரும் பலனடைவர். மம்தா பானர்ஜியின் அரசு பிரித்தாளுவதில் ஆர்வம் காட்டுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் போல் அல்லாமல் பாஜக அனைத்து விதமான வளர்ச்சிகளுக்கும் பணியாற்றுகிறது என நட்டா தெரிவித்தார்.

English summary
BJP President J.P.Nadda says that CAA will be implemented soon as it is being delayed because of Covid 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X