டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆந்திராவில் பவன் கல்யாணை வைத்து புதிய வியூகம் வகுக்கிறது பாஜக?

Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திராவில் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணை முன்வைத்து பாஜக புதிய வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தவர் பவன் கல்யாண். ஆந்திராவில் மாற்றம் நிகழ வேண்டும் என முழங்கினார்.

ஆனால் மக்கள் அவரது கட்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆண்ட தெலுங்குதேசம் கட்சிக்கே படுதோல்வியைத் தந்தனர். பவன் கல்யாண் கட்சி மிக மோசமாக தோற்றது.

சி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு... தமிழகத்து கோலம் போல... குஜராத் பட்டத் திருவிழாவும் போர்க்களமானதுசி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு... தமிழகத்து கோலம் போல... குஜராத் பட்டத் திருவிழாவும் போர்க்களமானது

 பாஜக பினாமி

பாஜக பினாமி

சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் கட்சியை பாஜகவின் பினாமி அணியாக சந்திரபாபுவும் ஜெகன் மோகன் ரெட்டியும் முத்திரை குத்தினர். இதனால் பகுஜன் சமாஜுடன் கை கோர்த்தார் பவன் கல்யாண்.

 பாஜக பக்கம்...

பாஜக பக்கம்...

ஆனால் பவன் கல்யாணுக்கு தேர்தல் அரசியல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டாவை பவன் கல்யாண் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

 பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

ஆந்திரா, தமிழகம், கேரளாவில் பாஜகவுக்கு புதிய முகங்கள் தேவை என்கிற நிலை இருக்கிறது. என்னதான் கட்சி அமைப்புகள் இருந்தாலும் வாக்குகளை அறுவடைய செய்ய இம்மாநிலங்களில் வலிமையான சக்தி ஒன்று பாஜகவுக்கு தேவைப்படுகிறது.

 பாஜக அரவணைப்பில் பவன்

பாஜக அரவணைப்பில் பவன்

தற்போது பவன் கல்யாணை வெளிப்படையாகவே அரவணைக்க தொடங்கியிருக்கிறது பாஜக. 2014 தேர்தலில் தெலுங்குதேசம்- பாஜக அணிக்காக பிரசாரம் செய்தவர் பவன் கல்யாண். அதனால் அவர் பாஜக அணிக்கு போவது ஆச்சரியம் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பவன் கல்யாண் முகத்தை முன்வைத்தாவது ஆந்திராவில் தாமரை மலருமா? என்பதை காலம் தீர்மானிக்கும்.

English summary
After Meeting with BJP working President J P Nadda sparks speculation of JSP-BJP tie-up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X