டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்ஏ போப்டே பதவி ஏற்றார்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்ஏ போப்டே இன்று பொறுப்பேற்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்ஏ போப்டே பதவி ஏற்றார்!

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்ஏ போப்டே இன்று பொறுப்பேற்றார்.

    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் தற்போது முடிந்துள்ளது. இவர் கடந்த வருடம் 13 மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவ. 17ம் தேதியோடு தலைமை நீதிபதி கோகாய் பதவிக்காலம் முடிந்தது.

    Justice Bodbe sworn in as the new CJI today

    தன்னுடைய பதவிக்காலத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முக்கியமான தீர்ப்புகள் பலவற்றை விசாரித்தார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று இவர்தான் தீர்ப்பு வழங்கியது. மிக முக்கியமாக அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட ஐந்து பேர் அமர்வுதான் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். வழக்கப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய வேண்டும்.

    வயது அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட வேண்டும். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி எஸ்ஏ போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    1978ல் இருந்து நீதிபதி எஸ்ஏ போப்டே சட்டத்துறையில் இருக்கிறார். இவர் 2000ல் மும்பை ஹைகோர்ட் நீதிபதியாக தன்னுடைய பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்றார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 2021 ஏப்ரல் மாதம் வரை எஸ்ஏ போப்டே இந்த பதவியில் இருப்பார்.

    English summary
    Justice Bodbe to take oath as the new CJI today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X