டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த ஒரு வரிதான் முக்கியம்.. ரபேல் வழக்கில் தனி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜோசப்.. என்ன சொன்னார்?

ரபேல் வழக்கின் மறுசீராய்வு மனுவில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் வழங்கிய தீர்ப்பு அதிக கவனம் ஈர்த்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் வழக்கின் மறுசீராய்வு மனுவில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் வழங்கிய தீர்ப்பு அதிக கவனம் ஈர்த்துள்ளது. மூன்று நீதிபதிகள் அமர்வில் இவர் தனி தீர்ப்பு வழங்கினார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.

 ஆனால் தனி

ஆனால் தனி

இந்த ரபேல் வழக்கில் நீதிபதி கே எம் ஜோசப் மட்டும் தனி தீர்ப்பை வழங்கினார். அதில், ரபேல் வழக்கில் எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. உரிய ஆதாரங்களுடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

மாற்றமும்

மாற்றமும்

அதேபோல் மற்ற இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கும் சில விஷயங்களையும் நான் ஏற்கிறேன். ஆனால் மனுதாரர்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் சிபிஐ அமைப்பை அணுகலாம். சிபிஐ விதிப்படி அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அரசிடம் அனுமதி வாங்கிய பின் அவர்கள் வேண்டுமானால் இதை விசாரிக்கலாம்.

ரபேல் தீர்ப்பு

ரபேல் தீர்ப்பு

ரபேல் தீர்ப்பை வைத்து, இதை விசாரிக்கவே கூடாது என்று கூறவில்லை. சிபிஐ ஏதாவது ஆதாரம் கிடைத்தால் அரசிடம் அனுமதி வாங்கி இதை விசாரிக்கலாம். ஆனால் ரபேல் வழக்கில் இதுவரை எங்களிடம் எதுவும் ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக எதிர்காலம்

பாஜக எதிர்காலம்

இதன் மூலம் ரபேலில் எதிர்காலத்தில் ஆதாரம் கிடைத்தால் சிபிஐ விசாரிக்கலாம். ஆனால் மற்ற இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. இதனால் ரபேல் வழக்கில் பாஜகவிற்கு இனி எதிர்காலத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

யார் இவர்

யார் இவர்

நீதிபதி கேஎம் ஜோசப் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இவரை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய மத்திய அரசு எதிர்த்து வந்தது. கொலிஜியம் செய்த பரிந்துரையை மத்திய அரசு இரண்டு முறை நிராகரித்து கடைசியில் ஏற்றுக்கொண்டது. இவர் மத்திய அரசுக்கு எதிரானவர் என்று அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Justice KM Joseph gives a separate verdict in Rafale Deal case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X