டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி வன்முறை வழக்குகளை விசாரித்த நீதிபதி முரளிதர் நள்ளிரவில் திடீரென இடம்மாற்றம் செய்யப்பட்டது அவமானகரமானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற போர்வையில் இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறை கும்பல் வெறிகொண்டு தாக்கியது. இதில் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

Justice Muralidhar transfer: Priyanka calls shameful, Rahul remembers Judge Loya

இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று விசாரித்தார். அப்போது டெல்லி போலீசாரை மிக கடுமையாக விமர்சித்தார்.

மேலும் மீண்டும்1984 சீக்கியர் மீதான வன்முறை போல மற்றொரு சம்பவம் நடக்க அனுமதிக்க முடியாது; வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவுகளையும் நீதிபதி முரளிதர் பிறப்பித்தார். இந்த நிலையில் நள்ளிரவில் நீதிபதி முரளிதர் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இது நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி, நீதிபதி முரளிதர் இடமாற்றம் கவலைக்குரியது; அவமானகரமானது. நீதித்துறையின் வாயை மூடப்பார்க்கிற மத்திய அரசு.நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கிறது மத்திய அரசு என சாடியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மர்மமான முறையில் உயிரிழந்த நீதிபதி கோயாவின் பெயரை குறிப்பிட்டு அவரை நினைவூட்டுவதாக பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில், அதிகார போதையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த முடிவை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ராகுல் குறிப்பிட்ட நீதிபதி லோயா யார்?

தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் பல என்கவுண்ட்டர்கள் போலி என அம்பலமானது. இதில் ஒன்று சோராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கு. இவ்வழக்கில் அமித்ஷா மற்றும் குஜராத் போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அமித்ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.

அமித்ஷா மீதான வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. மத்தியில் 2014-ல் பாஜக ஆட்சி வந்த பின்னர், இவ்வழக்கு விசாரணையில் அமித்ஷா ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடும் அதிருப்தியை நீதிபதி லோயா வெளியிட்டிருந்தார். அமித்ஷா மீதான வழக்கில் கடுமை காட்டியவர் நீதிபதி லோயா. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது லோயா மரணமடைந்தார். பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அளித்த தீர்ப்பால், அமித்ஷா இவ்வழக்கில் இருந்தே விடுதலையானார்.

2017-ல் தான் லோயாவின் சகோதரி மூலம், அவரது மரணத்தில் மர்மம் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. ஆனாலும் இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இதனைக் குறிப்பிட்டுத்தான் ராகுல் காந்தி தற்போது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
Cong. General Secretary Priyanka Gandhi said it was “sad and shameful” that Justice S Muralidhar of the Delhi High Court was transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X