டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு.. விசாரணை அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகல்!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தற்போது நீதிபதி ரமணா விலகி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தற்போது நீதிபதி ரமணா விலகி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தின், ஜூனியர் பணியாளாக பணியாற்றி வந்தவர் இவர்.

இவரது புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.

 3 பெண்கள்.. 6 ஆண்கள்.. இவர்கள்தான் தாக்குதல் நடத்திய குழுவா? புகைப்படம் வெளியிட்ட இலங்கை அரசு! 3 பெண்கள்.. 6 ஆண்கள்.. இவர்கள்தான் தாக்குதல் நடத்திய குழுவா? புகைப்படம் வெளியிட்ட இலங்கை அரசு!

முறை என்ன

முறை என்ன

இந்த வழக்கை மூன்று பேர் கொண்டு நீதிபதிகள் விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் எந்த வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். ஆனால் இந்த வழக்கே தலைமை நீதிபதிக்கு எதிரானது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

அதனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அடுத்தடுப்படியாக மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி போட்பேதான் இந்த அமர்வை தேர்வு செய்தார். அதன்படி நீதிபதி போட்பே, ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த அமர்வில் இடம்பிடித்தார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் இதற்கு வழக்கு தொடுத்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி ரமணா, ரஞ்சன் கோகாய்க்கு நெருங்கிய நண்பர். அவர் நான் மனு கொடுத்த போதே அதை தவறான குற்றச்சாட்டு என்று கூறினார். இதனால் அவர் இதை விசாரிக்க கூடாது என்று அந்த பெண் கூறினார்.

விலகினார்

விலகினார்

இதையடுத்து தற்போது நீதிபதி ரமணா இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த நீதிபதி போட்பே, ராமானவை வயதின் அடிப்படையில்தான் தேர்வு செய்தேன். இதில் வேறு எந்த விதமான உள்நோக்கமும், குளறுபடியும் இல்லை என்றார்.

English summary
Justice NV Ramana recuses himself from the panel probing Sexual Allegations against CJI Ranjan Gogoi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X