டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப சிதம்பரம் மனுவை நிராகரித்த நீதிபதி வெள்ளிக்கிழமை ஒய்வு.. அவர் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்!

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கௌர் வரும் வெள்ளிக்கிழமை ஒய்வு பெறுகிறார்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர் ப .சிதம்பரம். கடந்த 2007ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நீதியை பெறுவதில் அனுமதி வழங்கியதில் 305 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக சிபிஐக்கு புகார்கள் வந்தது.

    இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில் அவரை கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டிய நிலையில் ப சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    நீதிபதி அறிவிப்பு

    நீதிபதி அறிவிப்பு

    இந்த மனுவினை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கௌர் விசாரித்து வந்தார. நேற்று அவர் அளித்த தீர்ப்பில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

     இரும்பு கரம் கொண்டு

    இரும்பு கரம் கொண்டு

    இது தொடர்பாக நீதிபதி சுனில் கௌர் தனது தீர்ப்பில் கூறியிள்ளதாவது: "இந்த விவகாரத்தில் முறைகேடுகள் அனைத்துக்கும் மனுதாரர் ( ப சிதம்பரம்) தலைமையேற்று உள்ளார். அவர் (சிதம்பரம்) விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களை முன்ஜாமீன் வழங்குவதற்கான நியாயத்தை எடுத்துரைக்கவிலலை. பொருளாதாரம் சார்ந்த குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அணுக வேண்டியது அவசியம். இது போன்ற பெரிய குற்றங்களை விசாரணை அமைப்புகளின் கைகளை கட்டி வைக்க முடியாது,

    நியாயப்படுத்திட முடியாது

    நியாயப்படுத்திட முடியாது

    மனுதாரர் முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதையும் அந்த நேரத்தில் தான் ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு 350 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி வழங்கி உள்ளார் என்பதையும் மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்ற எம்பியா இருக்கிறார் என்பதால் மட்டுமே அவருடைய முன்ஜாமின் கோரிக்கையை நியாயப்படுத்திட முடியாது. இந்த வழக்கு அடிப்படை இல்லாதது என்றோ, அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றோ , பழிவாங்கும் செயல் என்றோ ஒதுக்கிட முடியாது" இவ்வாறு தீர்ப்பில் கூறினார்.

    தீர்ப்பின் முக்கிய அம்சம்

    தீர்ப்பின் முக்கிய அம்சம்

    இதனிடையே தீர்ப்பளித்த நீதிபதி சுனில் கௌர் அடுத்த 48 மணிநேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவர் தனது தீர்ப்பில் முக்கியமான குறிப்பிட்ட விஷயம் பண மோசடி போன்ற உன்னத வழக்கில் முன் ஜாமின் வழங்கினால் அது சமூகத்துக்கு தவறான செய்தியை அனுப்பி விடும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனிடையே சிதம்பரம் மனுவை நிராகரித்த நீதிபதி சுனில் கௌர் தான், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை வங்கி பண மோசடி வழக்கில் முன்ஜாமின் மனுவை நிராகரித்து, கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சில மணி நேரத்திலேயே ரதுல் பூரி கைது செய்யப்பட்டார்.

    English summary
    Justice Sunil Gaur Who Rejected P Chidambaram's Anticipatory Bail Request Retires On Friday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X